இந்தியா vs ஜிம்பாப்வே டி20 தொடரை பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
இந்திய அணி டி20 உலக கோப்பை வென்ற பின் நேற்று இந்தியா திரும்பியது. நேற்று வெற்றி கொண்டாட்டம் மும்பையில் மெரைன் டிரைவில் நடைபெற்றது. இதில் இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் திறந்த வெளி பஸ்சில் ஊர்வலமாக வந்தனர். இதில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
பின் வான்கடே மைதானத்தில் நடை பெற்ற பாராட்டு விழாவில் பிசிசிஐ சார்பில் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ. 125 கோடி பரிசாக வழங்க பட்டது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி20 போட்டிகள் ஜூலை 6 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச T20 போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்து விட்டனர். அதே போல டி20 உலக கோப்பையில் விளையாடிய சீனியர் வீரர்களான ஜஸ்பிரிட் பும்ரா, ஹார்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்திய அணி இளம் வீரர்களை கொண்டுள்ளது. ஷப்மன் கில் கேப்டனாக தேர்வு செய்ய பட்டுள்ளார்.
T20 உலக கோப்பை வென்ற அணியில் இடம் பெற்ற யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் மற்றும் சிவம் துபே ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். அதே போல் டி20 உலக கோப்பையில் ரிசர்வ் வீரர்களாக இருந்த ரிங்கு சிங், ஆவேஷ் கான் மற்றும் கலீல் அஹ்மத் ஆகியோரும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் இடம் பெற்றுள்ளனர்.
இந்தியா vs ஜிம்பாப்வே டி20 அட்டவணை
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் 5 T20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் போட்டி ஜூலை 6 ஆம் தேதியும் கடைசி போட்டி ஜூலை 14 ஆம் தேதியும் நடைபெறும். இணைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நடைபெறும்.
Match | Date |
---|---|
India vs Zimbabwe 1st T20I | Saturday, July 6 |
India vs Zimbabwe 2nd T20I | Sunday, July 7 |
India vs Zimbabwe 3rd T20I | Wednesday, July 10 |
India vs Zimbabwe 4th T20I | Saturday, July 13 |
India vs Zimbabwe 5th T20I | Sunday, July 14 |
இந்தியா vs ஜிம்பாப்வே போட்டி நடைபெறும் மைதானம்
இந்தியா vs ஜிம்பாப்வே டி20 தொடர் அனைத்து ஐந்து போட்டிகளும் ஹராரே நகரில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறும். முதல் போட்டி ஜூலை 6 அன்று இந்திய நேரம் மாலை 4:30 மணி முதல் தொடங்கும்.
இந்தியா vs ஜிம்பாப்வே மேட்ச் எங்கு பார்க்கலாம்
அனைத்து போட்டிகளும் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும். இதற்கிடையில், இந்தியா vs ஜிம்பாப்வே டி20 தொடரின் நேரடி ஒளிபரப்பை சோனி லைவ் ஆப் மற்றும் வலைத்தளத்தில் பார்க்கலாம்.
இந்தியா vs ஜிம்பாப்வே அணி விவரம்
இந்தியா அணி: ஷுப்மான் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கைக்வாட், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), த்ருவ் ஜுரேல் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், கஹ்லீல் அஹ்மத், முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே.
முதல் இரண்டு டி20க்கள்: சாய் சுதர்ஷன், ஜிதேஷ் சர்மா மற்றும் ஹர்ஷித் ராணா.
ஜிம்பாப்வே அணி: சிகந்தர் ராசா (கேப்டன்), ஃபராஸ் அக்ரம், பிரையன் பென்னட், ஜோனதன் காம்பெல், தென்டாய் சதாரா, லூக் ஜாங்வே, இனசன்ட் கையா, கிளைவ் மான்டாண்டே, வெஸ்லி மதிவேரே, தாடிவானாஷே மருமாணி, வெல்லிங்டன் மசகட்ஸா, பிராண்டன் மவுதா, பிளெசிங் முஜரபானி, டியான் மைர்ஸ், அந்தும் நக்வி, ரிச்சர்ட் ந்காராவா, மில்டன் சும்பா.