வைரல் புகைப்படம்! ஒரே போட்டோவில் மூன்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் தோனி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெள்ளிக்கிழமை இணையத்தில் வெளியானது. இந்த புகைப்படம் வெளியானது முதல், சமூக வலைதளங்களில், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
தோனி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சேர்ந்து இருக்கும் புகைப்படம் வெளியானது முதல் சமூக ஊடகங்களில் விவாத பொருளாக ஆகியுள்ளது. பலரும் தங்களது கருதுக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஒரே போட்டோவில் சச்சின், தோனி மற்றும் ரோஹித்
இந்த புகைப்படத்தை பார்க்கும் போது சச்சின், தோனி மற்றும் ரோஹித் ஆகியோர் ஒரு உணவகத்தில் உட்கார்ந்து இருக்கின்றனர். இது ஒரு விளம்பர படத்துக்காக இருக்கலாம் என தெரிகிறது. பொதுவாக ஐபில் போட்டிகளின் போது, பல விளம்பர படங்கள் ஷூட்டிங் நடப்பது வழக்கம். எனவே இது ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படமாக இருக்கலாம்.
முன்னாள் இந்திய அணி மற்றும் சிஎஸ்கே அணியின் கேப்டனும், புகழ்பெற்ற விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் தோனி, ஐபிஎல் 2024 சீசன் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பு கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். அதை தொடர்ந்து சிஎஸ்கே அணியின் இளம் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே அணியை சிறந்த முறையில் வழிநடத்தி வருகிறார். சிஎஸ்கே அணியில் கேப்டன் பொறுப்பு தோனியிடமிருந்து ருதுராஜ் கெய்க்வாடிற்கு சுமூகமான முறையில் ஒப்படைக்கப்பட்டது.
மறுபுறம், ரோஹித் ஷர்மா மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். சென்ற ஆண்டு வரை குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி நேரத்தில், விலைக்கு வாங்கியது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பியவுடன் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இது மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் ரோஹித் சர்மா ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியது. இப்போதும் இது அணிக்குள் நீறு பூத்த நெருப்பாக உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் வெளிப்படையாக ஹர்திக் பாண்டியாவிற்கு தங்களது எதிர்ப்பை மைதானத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
தனது ஓய்வு வாழ்க்கையை அனுபவித்து வரும் புகழ்பெற்ற டெண்டுல்கர், விளம்பர படங்களில் நடிப்பது மற்றும் தனது தொழிலில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வழிகாட்டியாகவும் (mentor) பணியாற்றி வருகிறார்.
ரோஹித் சர்மா தனது எதிர்காலம் பற்றி கூறியது
முன்னதாக, தனது எதிர்காலம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தனது ஓய்வு திட்டத்தை நிராகரித்தார். தற்போதைக்கு ஒய்வு பெரும் எண்ணம் இல்லை என்றும் உலக கோப்பை வெல்ல வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் கூறினார்.
புகழ்பெற்ற இசைக்கலைஞர் எட் ஷீரன் மற்றும் கௌரவ் கபூர் ஆகியோருடன் இணைந்து சாம்பியன்ஸ் பிரேக்ஃபாஸ்ட் என்ற சிறப்புப் பதிப்பின் சமீபத்திய உரையாடலில் கிரிக்கெட்டில் தனது எதிர்காலம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த ரோஹித், ஓய்வு திட்டத்தை நிராகரித்தார்.
“நான் உண்மையில் ஓய்வு பெறுவதைப் பற்றி யோசிக்கவில்லை. ஆனால், வாழ்க்கை எங்கு அழைத்துச் செல்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. நான் இன்னும் நன்றாக விளையாடுகிறேன். அதனால் நான் இன்னும் சில வருடங்கள் தொடரப் போகிறேன், பின்னர், எனக்குத் தெரியாது” என்று ரோஹித் கூறினார்.
“நான் உண்மையிலேயே உலகக் கோப்பையை வெல்ல விரும்புகிறேன், 2025 இல் WTC இறுதிப் போட்டி உள்ளது, அதில் இந்தியா இறுதி போட்டிக்கு தகுதி பெற்று கோப்பையை வெல்லும் என்று நம்புகிறேன்,” என்று ரோஹித் குறிப்பிட்டார், சர்வதேச கிரிக்கெட்டில் குறிப்பிடத்தக்க மைல்கற்களை அடைவதற்கான தனது உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
வைரல் புகைப்படம்! ஒரே போட்டோவில் மூன்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள்
Sachin Tendulkar, MS Dhoni & Rohit Sharma together in Mumbai.
— CricketMAN2 (@ImTanujSingh) April 12, 2024
– The Reunion of Three Icons..!!!!🐐 pic.twitter.com/NuTj6T5yQ2