T20 World Cup 2024, ஜூன் 2, 2024 தொடங்க உள்ளது. இந்த போட்டிகள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கு பெரும் இந்த உலக கோப்பையின் இறுதி ஆட்டம் ஜூன் மாதம் 29ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் உலக கோப்பைக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது. அதில் இந்தியா பாக்கிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் டிக்கெட் வாங்க கடுமையான போட்டி நிலவியது.
ஜூன் 9 ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை 2024 இல் இந்தியாவும் பாகிஸ்தானும் மோத உள்ளன. இந்த போட்டி ஜூன் 9-ம் தேதி நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த விறுவிறுப்பான போட்டிக்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ரசிகர்கள் போட்டி போட்டு வருகின்றனர். இந்த போட்டியை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளதால் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிக்க தயாராக உள்ளனர்.
இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கியது. அதிகாரப்பூர்வ விற்பனையில் டிக்கெட்டுகள் விலை $6 (சுமார் ருபாய் 500) இல் தொடங்கியது. டிக்கெட் விற்பனை தொடங்கிய சிறிது நேரத்திலேயே அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்தன.
அதிகாரபூர்வ விற்பனை முடிந்த உடனேயே மறுவிற்பனை சந்தைகளில் (Resale Platform) விலைகள் பெரிதும் உயர்ந்துள்ளன. பாகிஸ்தான் மற்றும் கனடாவுக்கு எதிரான இந்தியாவின் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் சிறிது நேரத்திலேயே விற்று விட்டதால், அவை ஸ்டப்ஹப் மற்றும் சீட்கீக் (StubHub and SeatGeek) போன்ற மறுவிற்பனை செய்யும் இடங்களில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இந்த டிக்கெட்டுகள் அவற்றின் அசல் விலையை விட குறைந்தது இரண்டு மடங்கு விலையில் வழங்கப்படுகின்றன. சில டிக்கெட்டுகளின் விலை அவற்றின் ஆரம்ப விலையை விட மிக அதிக விலையில் உள்ளது.
பிரபல வெப்சைட் crictracker ன் படி இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை போட்டியின் டிக்கெடின் குறைந்த விலை ஒரு லட்சத்திற்கு மேல் உள்ளது. இந்தியா vs பாகிஸ்தான் T20 World Cup 2024 மோதலுக்கான மலிவான மறுவிற்பனை டிக்கெட்டின் விலை தற்போது StubHub இல் சுமார் $1,259 (INR 1.04 லட்சம்) ஆகும். சீட்கீக்கில் மிகக் குறைந்த விலை ஒப்பீட்டளவில் $1,166 (INR 96,000) ஆக குறைவாக உள்ளது,
இந்தியா – பாகிஸ்தான் போட்டி, டிக்கெட் விலை ரூ.1.84 கோடி!
இந்தியா – பாகிஸ்தான் போட்டியின் டிக்கெட், மறுவிற்பனை சந்தையில் விலையுயர்ந்த டிக்கெட்டின் அடிப்படை விலை $175,000 (INR 1.4 கோடி) ஆகும். இருப்பினும், $50,000 (INR 41 லட்சம்) கூடுதல் கட்டணத்துடன், மொத்த செலவு கிட்டத்தட்ட $225,000 டாலர்கள் (INR 1.86 கோடி) வரை செல்கிறது. இது அமெரிக்காவில் மறுவிற்பனை சந்தையில் புயலை கிளப்பியுள்ளது.
அமெரிக்காவில் நடக்கும் பிரபல விளையாட்டு போட்டிகளுக்கு இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி சவால் விடும் வகையில் அமைந்துள்ளது. அமெரிக்காவில் பிரபலமான விளையாட்டு நிகழ்வுகளின் டிக்கெட் விலையை விட இந்த போட்டியின் விலை மறுவிற்பனை சந்தையில் அதிகமாக உள்ளது. 2023 இல் சராசரி உலகத் தொடர் டிக்கெட்டின் விலை சுமார் $1,100 (INR 91,000). இதற்கிடையில், சராசரி சூப்பர் பவுல் 58 டிக்கெட் $9,000 (INR 7.45 லட்சம்) ஐ எட்டியது.
எனவே அமெரிக்காவில் நடைபெற உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் விளையாடும் T20 World Cup 2024 போட்டியை நேரில் பார்க்க வேண்டுமானால் குறைந்தது 1 லட்சமும் அதிகபட்சமாக 1.85 கோடியும் செலவழிக்க வேண்டும்.