இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் விளையாட உள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளது. கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியாவில் தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் போட்டிகளுக்கு பார்டர்-கவாஸ்கர் டிராபி என பெயரிடப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளின் ஜாம்பவான்களை கௌரவபடுத்தும் விதமாக அவர்களின் பெயர்களில் இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது. 1991/1992 தொடருக்கு பிறகு, ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவது இதுவே முதல் முறையாகும்.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அவர்களின் வரவிருக்கும் கோடைகாலத்திற்கான அட்டவணையின் விவரங்களை வெளியிட்டுள்ளது, இதில் இந்திய அணி பங்குபெறும் 5 டெஸ்ட் போட்டிகள், பாகிஸ்தான் அணியின் ஒருநாள் போட்டிகள் மற்றும் T20 போட்டிகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதை தவிர ஆஸ்திரேலிய பெண்கள் அணி பங்குபெறும் போட்டிகளுக்கான அட்டவணையும் வெளியாகியுள்ளது. அதில் ஆஸ்திரேலியா பெண்கள் அணி நியூஸிலாந்து பெண்கள் அணிக்கு எதிராக செப்டம்பர் மாதத்தில் 3 T20 போட்டிகளில் விளையாட உள்ளது. அதை தொடர்ந்து இந்திய பெண்கள் அணிக்கு எதிராக 3 ODI போட்டிகள் டிசம்பர் மாதத்தில் நடைபெறும்.
இதன் பிறகு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கு பெரும் ஆஷஸ் தொடர் நடைபெற உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்து பெண்கள் அணி மூன்று ODIகள், மூன்று T20Iகள் மற்றும் ஒரு பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் விவரம்
ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி, நவம்பர் 22 ஆம் தேதி பெர்த்தில் நடைபெற உள்ளது. மற்ற போட்டிகள் அடிலெய்டு (பகல்-இரவு), பிரிஸ்பேன், மெல்போர்ன் மற்றும் சிட்னியில் நடைபெற உள்ளது. 1991/92ஆம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் பார்டர்-கவாஸ்கர் டிராபியின் ஒரு பகுதியாக ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவது இதுவே முதல் முறையாகும்.
இந்திய அணி 2017ஆம் ஆண்டிலிருந்து பார்டர்-கவாஸ்கர் டிராபியை தொடர்ந்து தக்வைத்து கொண்டிருக்கிறது. இந்த முறையும் இந்திய அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இனி முழு அட்டவணையை பார்க்கலாம்.
ஆண்கள் கிரிக்கெட் அட்டவணை
ஆஸ்திரேலியா vs இந்தியா டெஸ்ட் அட்டவணை:
டெஸ்ட் எண் | தேதி | இடம் |
1 | நவம்பர் 22-26 | பெர்த் |
2 | டிசம்பர் 6-10 (பகல் மற்றும் இரவு) | அடிலெய்டு |
3 | டிசம்பர் 14-18 | பிரிஸ்பேன் |
4 | டிசம்பர் 26-30 | மெல்போர்ன் |
5 | ஜனவரி 3-7 | சிட்னி |
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான்
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ODI
ஒருநாள் போட்டி எண் | தேதி | இடம் |
1 | நவம்பர் 4 | மெல்போர்ன் |
2 | நவம்பர் 8 | அடிலெய்டு |
3 | நவம்பர் 10 | பெர்த் |
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் T20I
T20I எண் | தேதி | இடம் |
1 | நவம்பர் 14 | பிரிஸ்பேன் |
2 | நவம்பர் 16 | சிட்னி |
3 | நவம்பர் 18 | ஹோபர்ட் |
பெண்கள் கிரிக்கெட் அட்டவணை:
ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து, T20I தொடர்
T20I எண் | தேதி | இடம் |
1 | செப்டம்பர் 19 | மேக்கே |
2 | செப்டம்பர் 22 | மேக்கே |
3 | செப்டம்பர் 24 | பிரிஸ்பேன் |
ஆஸ்திரேலியா vs இந்தியா ODI
போட்டி எண் | தேதி | இடம் |
1 | டிசம்பர் 5 | பிரிஸ்பேன் |
2 | டிசம்பர் 8 | பிரிஸ்பேன் |
3 | டிசம்பர் 11 | பெர்த் |
ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து
ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து ODI
போட்டி எண் | தேதி | இடம் |
1 | ஜனவரி 12 | சிட்னி |
2 | ஜனவரி 14 | மெல்போர்ன் |
3 | ஜனவரி 17 | ஹோபர்ட் |
ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து டி20I
போட்டி எண் | தேதி | இடம் |
1 | ஜனவரி 20 | சிட்னி |
2 | ஜனவரி 23 | கான்பெர்ரா |
3 | ஜனவரி 25 | அடிலெய்டு |
ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து டெஸ்ட் போட்டி
போட்டி எண் | தேதி | இடம் |
1 | ஜனவரி 30-பிப்ரவரி 2 | மெல்போர்ன் (d/n) |
இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டிகள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆஸ்திரேலியா அணி இந்த முறை சிறப்பாக விளையாடி தொடரை வெல்ல முயலும். ஆனால் இந்திய அணி பேட்டிங் மற்றும் வேக பந்து வீச்சில் ஆஸ்திரேலியா அணிக்கு சற்றும் குறைவில்லாமல் இருப்பதால் அனைத்து போட்டிகளும் சவாலாக இருக்கும்.
Also Read: ICC T20 World Cup 2024: Check Teams, Format, and Schedule