மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் 2024 தொடரில் கடைசி போட்டியில் விளையாடிய பிறகு நீதா அம்பானி பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 தொடர் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு மிகுந்த ஏமாற்றம் மற்றும் வருத்தம் அளிக்கக்கூடிய சீசனாக அமைந்துவிட்டது மும்பை இந்தியன்ஸ் அணி 14 போட்டிகளில் விளையாடி வெறும் 4 வெற்றிகளுடன் பத்தாவது இடத்தைப் பிடித்தனர். இந்த முடிவு மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள், அணி நிர்வாகம் மற்றும் ரசிகர்கள் இடையே மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் சிக்கல்
2024 ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் ரோஹித் ஷர்மாவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கி, ஹர்திக் பாண்டியாவிடம் கேப்டன்ஷிப்பை ஒப்படைத்தது. ரோஹித் சர்மா 2013 முதல் 2023 வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்தார். அந்த 10 ஆண்டுகளில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றார்.
ஹர்திக் பாண்டியா பொறுத்தவரை குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக மிகவும் நன்றாக செயல்பட்டார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் முதல் ஐபிஎல் தொடரிலேயே கோப்பையை வென்றார். சென்ற ஆண்டு நடை பெற்ற ஐபிஎல் 2023 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் இறுதி போட்டியில் தோற்று இரண்டாம் இடம் பிடித்தது. எனவே ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியை பொறுத்தவரை நல்ல கேப்டனாக செயல்பட்டார்.
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது. ஆனால் இந்த முடிவு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எந்த ஒரு முன்னேற்றத்தையும் குடுக்கவில்லை. மாறாக மிகுந்த பின்னடைவை சந்தித்தது.
மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா இந்த சீசனில் பேட்டிங் மற்றும் பந்தில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் அவருடைய கேப்டன்ஷிப் குறித்தும், களத்தில் அவருடைய செயல்பாடு குறித்தும் பல கேள்விகள் எழுந்துள்ளது. அடுத்த ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்னதாக, ஹர்திக் பாண்டியா மற்றும் ரோஹித் சர்மா இருவரையும் மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைக்குமா என கேள்வி எழுந்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி உரிமையாளர் நீதா அம்பானி பேச்சு
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரான நீதா அம்பானி, அணி வீரர்களிடையே பேசினார். ஏமாற்றமளிக்கும் ஐபிஎல் 2024 சீசனுக்குப் பிறகு அணியின் மனநிலையை உயர்த்த உதவும் வகையில் மனதைக் கவரும் வகையில் பேசினார்.
மும்பை இந்தியன்ஸ், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 தொடரில், 10 அணிகள் கொண்ட தொடரில் கடைசி இடம் பிடித்தது. இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசியாக விளையாடிய போட்டிக்கு பிறகு நடந்த மீட்டிங்கில் பேசிய நீதா அம்பானி, இந்த சீசன் அனைவருக்கும் ஏமாற்றமளிக்கும் பருவம் என்று அழைப்பதில் எந்த கவலையும் இல்லை. இந்தப் தொடரில் என்ன நடந்தது என்பதைத் திரும்பிச் சென்று மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் ஒப்புக்கொண்டார்.
நீதா அம்பானி டிரஸ்ஸிங் ரூமில் பேசும் வீடியோ ஒன்றை மும்பை இந்தியன்ஸ் அணி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் அவர் பேசும் போது
“இந்த வருடம் ஐபிஎல் தொடர் நம் அனைவருக்கும் ஏமாற்றம் தரும் தொடர். நாம் விரும்பியபடி விஷயங்கள் நடக்கவில்லை, ஆனால் நான் இன்னும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர் தான். இதை நான் உரிமையாளராக சொல்லவில்லை. மும்பை இந்தியன்ஸ் ஜெர்சியை அணிவது ஒரு பெரிய கவுரவம் மற்றும் பாக்கியம் என்று நான் நினைக்கிறேன், மும்பை இந்தியன்ஸுடன் இணைந்திருப்பது எனக்கு ஒரு மரியாதை மற்றும் பாக்கியம். நாம் திரும்பிச் சென்று, மறுபரிசீலனை செய்து அதைப் பற்றி சிந்திப்போம் என்று நான் நினைக்கிறேன், ”என்று நிதா வீடியோவில் கூறினார்.
“Disappointing season for all of us. Things didn’t go the way we wanted them to, but I’m still a huge Mumbai Indians fan. Not just an owner. I think wearing the Mumbai Indians jersey is a huge honour and a privilege, and to be associated with Mumbai Indians, for me, is an honour and a privilege. I think, we will go back, review and think about it,”
அது மட்டுமல்லாமல் 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவிற்காக விளையாட இருக்கும் மும்பை இந்தியன்ஸ் வீரர்களுக்கும் நீதா அம்பானி வாழ்த்து தெரிவித்தார்.
“ரோஹித், ஹர்திக், சூர்யா மற்றும் பும்ரா ஆகியோருக்கு, அனைத்து இந்தியர்களும் உங்களுக்காக வாழ்த்துகிறார்கள் என்று நினைக்கிறேன். நாங்கள் உங்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம், ”என்றார்.
“To Rohit, Hardik, Surya (Suryakumar Yadav) and (Jasprit) Bumrah, I think, all Indians are cheering for you. We wish you all the best,”
Mrs. Nita Ambani talks to the team about the IPL season and wishes our boys all the very best for the upcoming T20 World Cup 🙌#MumbaiMeriJaan #MumbaiIndians | @ImRo45 | @hardikpandya7 | @surya_14kumar | @Jaspritbumrah93 pic.twitter.com/uCV2mzNVOw
— Mumbai Indians (@mipaltan) May 19, 2024
T20 உலகக் கோப்பை 2024, இந்திய அணிக்கான முதல் போட்டி ஜூன் 05 அன்று அயர்லாந்துக்கு எதிராக தொடங்குகிறது. ஜூன் 01 ஆம் தேதி நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசத்தை இந்தியா எதிர்கொள்கிறது.