WhatsApp Group Join Now
Telegram Group Join Now

கோபா அமெரிக்கா 2024: அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறை கோப்பையை வென்றது.

ஞாயிற்றுக்கிழமை கொலம்பியாவுக்கு எதிரான கோபா அமெரிக்கா 2024 இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

கோபா அமெரிக்கா 2024 இறுதிப் போட்டி, அர்ஜென்டினா vs கொலம்பியா ஹைலைட்ஸ்: 

Copa America 2024 இறுதி போட்டியை காண கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. எனவே ரசிகர்களை கட்டுப்படுத்த போலீசார் திணறினர். பாதுகாப்பு சோதனை காரணமாக ஏராளமான ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே காத்திருக்கப்பட்டனர். எனவே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட தாமதத்திற்கு பிறகே ஆட்டம் தொடங்கியது. 

கோபா அமெரிக்கா 2024 இறுதிப் போட்டி, அர்ஜென்டினா vs கொலம்பியா சிறப்பம்சங்கள்: 

2022 உலகக் கோப்பை சாம்பியன்ஸ் அர்ஜென்டினா அணியால் கொலம்பியாவின் டிஃபென்ஸ் உடைக்க முடியாததால் ஆட்டத்தின் முதல் பாதி மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. 

முதல் பாதியில், லியோனல் மெஸ்ஸி மற்றும் ஜூலியன் அல்வாரெஸ் இருவரும் ஆரம்ப வாய்ப்புகளை கோல்களாக மாற்றத் தவறினர், ஏனெனில் கொலம்பியா வீரர்களின் திறமையான டிபென்ஸ் மற்றும் அழுத்தமான பாணியிலான ஆட்டம் அவர்களுக்கு நிறைய சிக்கல்களை ஏற்படுத்தியது.

Also Read: ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக் விவாகரத்து? வைரல் வீடியோ!

காயம் காரணமாக வெளியேறியதால் அழுத மெஸ்ஸி

முதல் பாதியில், கொலம்பிய டிஃபெண்டரால் வீழ்த்தப்பட்ட மெஸ்ஸிக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக களத்தில் வந்த மருத்துவர்கள் அவரை பரிசோதித்தனர். சில நிமிடங்களுக்குப் பிறகு, அவர் களத்திற்குத் திரும்பினார், ஆனால் இரண்டாவது பாதியில் மீண்டும் கணுக்காலில் காயமடைந்தார். எனவே, மருத்துவ ஊழியர்கள் அவரை மைதானத்திலிருந்து வெளியேற்றினர். அவருக்கு பதிலாக நிக்கோலஸ் கோன்சலஸ் நியமிக்கப்பட்டார்.

அவர் மைதானத்தை விட்டு வெளியேறியபோது, ​​​​அர்ஜென்டினா அணிக்கு இறுதி போட்டியில் தொடர முடியாததால் , மெஸ்ஸி அடக்க முடியாமல் அழுதார். காயம் அவரை முன்கூட்டியே களத்தில் இருந்து வெளியேற்றிய பிறகு, வீங்கிய கணுக்காளுடன் பெஞ்சில் அவர் அழுவதைக் கூட காண முடிந்தது.

இரண்டாவது பாதியிலும் அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா கோல் எதுவும் அடிக்கவில்லை. எனவே வழக்கமாக விளையாடும் 90 நிமிடங்களில் யாரும் கோல் அடிக்கவில்லை. எனவே ஆட்டம் கூடுதல் நேரத்திற்கு சென்றது.

கூடுதல் நேரத்தில் லாடரோ மார்டினெஸ் அடித்த கோல்

கூடுதல் நேரத்தில் அர்ஜென்டினாவை சேர்ந்த மாற்று வீரர் லாடரோ மார்டினெஸ் 112வது நிமிடத்தில் அர்ஜென்டினாவுக்கு கோல் அடித்தார். அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றியது.

லியோனல் மெஸ்ஸி காயம் அடைந்து வெளியேறினாலும், லாடரோ மார்டினெஸின் கூடுதல் நேர கோலினால் அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் பட்டத்தை வென்றது.

கோபா அமெரிக்கா கோப்பையை பெரும் அர்ஜென்டினா

கோபா அமெரிக்கா கோப்பையை வென்ற பிறகு மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா வீரர்கள் கொண்டாடும் வைரல் வீடியோ!

இது வரை மொத்தம் 48 கோபா அமெரிக்கா போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் அர்ஜென்டினா 16 முறை கோப்பையை வென்று முதல் இடத்தில் உள்ளது. உருகுவே அணி 15 முறை கோப்பையை வென்று இரண்டாம் இடத்திலும் பிரேசில் அணி 9 முறை படத்தை வென்று 3ஆம் இடத்திலும் உள்ளது.

இந்த கேம் மெஸ்ஸியின் கடைசி போட்டியாக இருக்கலாம். மறுபுறம், மூத்த நட்சத்திரம் ஏஞ்சல் டி மரியா, கொலம்பியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியை அர்ஜென்டினாவுக்கான தனது கடைசி ஆட்டமாக அறிவித்தார்.

மெஸ்ஸியைப் போலவே, டி மரியா அர்ஜென்டினாவின் முக்கிய வெற்றியான பிரேசிலில் 2021ல் நடந்த கோபா அமெரிக்கா மற்றும் ஒரு வருடம் கழித்து கத்தாரில் நடந்த உலகக் கோப்பை பட்டத்தில் முக்கிய பங்காற்றினார்.

Leave a Comment