WhatsApp Group Join Now
Telegram Group Join Now

AUS vs NZ 1st Test Day 2: அதிரடியாக விளையாடிய கிரீன். 179 ரன்களுக்கு சுருண்ட நியூஸிலாந்து.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மூலம் முதல் டெஸ்ட் போட்டி நியூசிலாந்தில் உள்ள வெல்லிங்டன் நகரின் பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் டின் சவுதி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவியாக இருந்தது. ஆஸ்திரேலிய அணி முதல் நாளில் பேட்டிங் செய்ய முடியாமல் திணறியது. முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 279/9 ரன்கள் எடுத்தது.. கேமரூன் கிரீன் 103 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார், மறுமுனையில் ஜோஷ் ஹாசல்வுட் பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.

நியூஸிலாந்து அணியின் மேட் ஹென்றி நான்கு நான்கு விக்கெட்களை வீழ்த்தினார். வில் ஓரூர்க் மற்றும் ஸ்காட் குகெலிஜின் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.

AUS vs NZ 1st Test Day 2

இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது முதல் கேமரூன் கிரீன் மற்றும் ஜோஷ் ஹாசல்வுட் சிறப்பாக பேட்டிங் செய்து அணியில் ரன்களை உயர்த்தினர். மிக கடினமான ஆடுகளத்தில் கேமரூன் கிரீன் சிறப்பாக விளையாடி 174 ரன்கள் குவித்தார். மறுமுனையில் ஜோஷ் ஹாசல்வுட் நின்று விளையாடி ஆஸ்திரேலியாவை வலுவான 383 ரன்கள் குவிக்க உதவினார். இறுதியாக ஜோஷ் ஹாசல்வுட், மேட் ஹென்றி பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். மேட் ஹென்றி சிறப்பாக பந்து வீசி 30 ஓவர்களில் 70 ரன்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

தனது முதல் இன்னிங்க்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணியின் முதல் 5 பேட்ஸ்மேன்கள் வெறும் 25 ரன்கள் மட்டுமே எடுத்தனர். நியூஸிலாந்து அணி 29 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. நல்ல பார்மில் உள்ள கேன் வில்லியம்சன் ரன் எதுவும் எடுக்காமல் ரன் அவுட் முறையில் வெளியேறினார்.

டாம் ப்ளண்டெல் மற்றும் க்ளென் பிலிப்ஸ் ஜோடி 84 ரன்களையும், மாட் ஹென்றி 42 ரன்களையும் குவித்து நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 179 ரன்களை எட்ட உதவினர்.

ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லயன் 4 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

204 ரன்கள் முன்னிலையில், தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா ஆட்ட நேர முடிவில் 13 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து 217 ரன்கள் முன்னிலையில் உள்ளது.ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லாபுஷென் ஆட்டம் இழந்தனர். தற்போது உஸ்மான் கவாஜா மற்றும் நாதன் லயன் ஆகியோர் கிரீஸில் உள்ளனர். டிம் சவுதி இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினார்.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது. இந்த நிலையில் இருந்து நியூஸிலாந்து வெற்றி பெற வேண்டுமானால் நாளை ஆஸ்திரேலிய அணியை குறைந்த ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் கைப்பற்றவேண்டும்.

Leave a Comment