WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ஹர்திக் பாண்டியாவை விளாசிய முன்னாள் இந்திய வீரர்!

ஹர்திக் பாண்டியாவை விளாசிய முன்னாள் இந்திய வீரர்! திங்களன்று நடந்த ஐபிஎல் 2024 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது, இதனால் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஷிப் பற்றி மீண்டும் சச்சரவு எழுந்துள்ளது. 

மும்பை இந்தியன்ஸ் அணி இது வரை 8 போட்டிகளில் விளையாடி 3 வெற்றியும் 5 தோல்வியும் அடித்துள்ளது. இதுவரை மொத்தமாக 6 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் தனது கடைசி போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா 7-வது இடத்தில் பேட்டிங் செய்து 10 ரன்கள் மட்டுமே எடுத்தார், மேலும் 4 ஓவர்களில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 37 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

ரோஹித் ஷர்மாவுக்குப் பதிலாக ஹர்திக்கை எம்ஐ கேப்டனாக நியமித்த போதே ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. 5 முறை ஐபில் கோப்பையை வெல்ல காரணமாக இருந்த ரோஹித் ஷர்மாவை கேப்டன்ஷிப்பில் இருந்து நீக்கிய விதம் அதிச்சியை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளதால் ரசிகர்கள் ஹர்திக் பாண்டியா மேல் கடும் கோவத்தில் உள்ளனர். இந்த நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், ஹர்திக் தனது இழந்த ஃபார்மை மீண்டும் பெறுவதற்கு எளிதான வழிகளைக் தேர்ந்தெடுக்கிறார் என குற்றம் சாட்டியுள்ளார். இவ்வாறு செயல்பட்டு வந்தால் ஹர்திக் பாண்டியா தனது அணிக்கு ‘பலவீனமான இணைப்பாக’ மாறும் அபாயம் உள்ளது என எச்சரித்துள்ளார்.

ஹர்திக் பாண்டியாவை விளாசிய முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான்

“மும்பை இந்தியன்ஸ் இன்னும் பேப்பரில் மிகச் சிறந்த அணியாக உள்ளது., ஆனால் மிகவும் மோசமாக நிர்வகிக்கப்படுகிறது. குறிப்பாக, ஒரு கேப்டனாக ஹர்திக் பாண்டியா ஃபார்ம் இல்லாமல் இருந்தால், அவர் தனது சொந்த அணிக்கு பலவீனமான இணைப்பாக மாறுவார். ஹர்திக் பாண்டியா ஃபார்ம் இல்லாமல் இருப்பதால் அவருடைய அடித்து அதிரடியாக விளையாடும் திறன் பாதிக்க படுகிறது. இது அவர் இந்திய அணியில் விளையாடும் போது கூட எதிரொலிக்கும். அவர் மீண்டும் ஃபார்முக்கு வருவதற்கு எளிதான வழிகளைத் தேடுவது போல் தெரிகிறது. அவரது அணி மற்றும் சக வீரர்களின் மரியாதையை வெல்ல வேண்டும் என்றால் கடினமான நேரத்தில் விளையாட வர வேண்டும்” என்று இர்பான் பதான் ஒரு வீடியோவில் கூறியுள்ளார்.

“பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடும்போது அவர் நம்பர் 3 இல் பேட்டிங் செய்ய வருகிறார். ஆனால் இன்று அவர் நேஹால் வதேரா மற்றும் முகமது நபியை தனக்கு முன்னால் அனுப்பினார். கடினமான நேரத்தில் ஒரு தலைவராக அவர் களத்தில் பேட்டிங் செய்ய வந்திருக்க வேண்டும். ஆனால் நேஹால் வதேரா மற்றும் முகமது நபியை தனக்கு முன்னால் அனுப்பிவிட்டார். அதே போல பௌலிங்கில் தப்பித்து விடலாம் என நினைத்து முதல் ஓவரை வீசினார், ஆனால் பட்லர் 2 பவுண்டரி அடித்து ஃபார்மிற்கு வர உதவினார். பின்னர் அணியின் சிறந்த வீரர் பும்ரா பந்துவீசும்போது, பட்லர் அவரை எதிர்கொள்ள நல்ல நம்பிக்கையைப் பெற்றுவிட்டார்.” என்று இர்பான் பதான் கூறினார்.

இன்னும் ஒரு வாரத்திற்குள் T20 worldcup 2024 அணி தேர்வு செய்யப்பட உள்ளது. இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவின் ஃபார்ம் சிறப்பாக இல்லை. இந்த ஐபில் 2024 போட்டிகளில் பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலும் எதிர்பார்த்த அளவு விளையாடவில்லை. எனவே T20 உலககோப்பை அணியில் ஹர்திக் பாண்டியா இடம் பெறுவாரா என கேள்வி எழுந்துள்ளது.

Leave a Comment