WhatsApp Group Join Now
Telegram Group Join Now

புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சம்பளம் மற்றும் சலுகைகள் விவரங்கள்!

கவுதம் கம்பீர் சம்பளம் மற்றும் அவரது சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை இங்கு கீழே பார்க்கலாம்.

கடந்த செவ்வாயன்று, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, ராகுல் டிராவிட்டிற்குப் பிறகு, இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீரை அறிவித்தார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் தொடர் வரும் ஜூலை 27 அன்று தொடங்க இருக்கிறது. இந்த தொடரில் மூன்று ODIகள் மற்றும் மூன்று T20Iகள் அடங்கும். கவுதம் கம்பீர் ஜூலை 27 தொடங்கும் இலங்கைக்கு எதிரான தொடரிலிருந்து இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ளார்.

இந்திய ஆடவர் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிடின் பதவி காலம் டி20 உலக கோப்பையுடன் முடிவடைந்தது. ட்ராவிடின் சம்பளம் 12 கோடியாக இருந்தது. இந்த நிலையில் புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சம்பளம் எவ்வளவு என்பதை இங்கு பார்க்கலாம்.

கவுதம் கம்பீர் பதவி காலத்தில் நடக்க உள்ள ஐசிசி போட்டிகள் விவரம்

கம்பீர் தலைமையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் ஐந்து ஐசிசி போட்டிகளில் இந்தியா பங்கேற்க உள்ளது. இதில் 2025 இல் சாம்பியன்ஸ் டிராபியும், அதைத் தொடர்ந்து அந்த ஆண்டின் பிற்பகுதியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியும் அடங்கும். இது இந்தியா இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதை பொறுத்தது.

அடுத்து இந்திய அணி 2026 இல் T20 உலகக் கோப்பையிலும், 2027 இல் ODI உலகக் கோப்பையிலும் விளையாட இருக்கிறது.அதே 2027 ஆம் ஆண்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறும். இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி அடைந்தால் கோப்பையை வெல்வதற்கு வாய்ப்புள்ளது. இந்த 5 ஐசிசி போட்டிகளில் இந்தியாவை வெற்றி பாதைக்கு கவுதம் கம்பீர் அழைத்து செல்வார் என அனைவரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

கவுதம் கம்பீர் சம்பளம் மற்றும் சலுகைகள் விவரங்கள்!

கவுதம் கம்பீர் சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் அவரது நியமனத்தில் தாமதத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. சரியான புள்ளிவிவரங்கள் வெளியிடப்படாத நிலையில், அவரது வருவாய் ராகுல் டிராவிட்டின் முந்தைய சம்பளத்துடன் நெருக்கமாக இருக்கும் என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. டைம்ஸ் நவ் செய்திகளின்படி, கம்பீர் ஆண்டுக்கு சுமார் ரூ.12 கோடி வரை சம்பளம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கவுதம் கம்பீர் தினசரி அலவன்ஸ் மற்றும் நன்மைகள்

எகனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, சர்வதேச சுற்றுப்பயணங்களின் போது அவரது சம்பளத்துடன் சேர்த்து, கம்பீர் தினசரி 21,000 ரூபாய் அலவன்ஸ் பெறுவார். அவர் அணியுடன் விமானத்தில் வணிக வகுப்பில் (Business class) பயணம் செய்வார். அதை தவிர ஹோட்டல்களில் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளருக்கு வழங்கப்படும் உயர்மட்ட தங்குமிடங்கள் வழங்கப்படும்.

கௌதம் கம்பீர் நிகர சொத்து மதிப்பு

டைம்ஸ் நவ் மற்றும் பொதுவில் கிடைக்கும் தரவுகளின்படி, கம்பீரின் நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ. 265 கோடியாக உள்ளது. 2019 இல் பாரதிய ஜனதா கட்சியுடன் அவர் அரசியலுக்கு வந்தபோது, ​​அவரது வருமான வரி ஆவனபடி அவரது வருமானம் ஆண்டுக்கு சுமார் ரூ.12.40 கோடியாக இருந்தது.

கௌதம் கம்பீர் கிரிக்கெட் வாழ்க்கையின் சிறப்பம்சங்கள்

கவுதம் கம்பீரின் இந்தியாவிற்காக விளையாடிய மிக சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவர். இவர் இந்தியாவுக்காக 58 டெஸ்ட், 147 ஒருநாள் மற்றும் 37 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

2007 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும், 2011 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் இந்தியாவின் வெற்றிக்கு அவர் முக்கிய பங்கு வகித்தார்.

ஐபிஎல்லில் அவரது கேப்டன்ஷிப்பில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டு முறை 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டு பட்டங்களை வென்றது. மீண்டும் 2024 இல் மூன்றாவது முறையாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபில் கோப்பையை வென்றது. இந்த முறை அணியின் வழிகாட்டியாக (Mentor) பணியாற்றி பட்டத்தை வெல்ல வழிவகுத்தார் என்பது அவரது சாதனைகளில் குறிப்பிடத்தக்கதாகும்.

இன்று இந்தியா மற்றும் ஜிம்பாப்வே மோதும் 4ஆவது டி20 போட்டி மாலை 4.30 மணிக்கு தொடங்கும். உடனடி லைவ் ஸ்கோர் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

Leave a Comment