தற்போது IPL 2024 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் பிரபல கிரிக்கெட் வீரர்கள் தொலைக்காட்சிக்கு பேட்டிகள் அளித்து வருகின்றனர். அவ்வாறு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற விராட் கோலி இந்தியாவின் இரண்டு இளம் வீரர்களை பற்றிய சுவாரசியமான செய்தியை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்தியாவின் இளம் நட்சத்திரங்களான இஷான் கிஷன் மற்றும் ஷுப்மான் கில் ஆகியோர் களத்திலும், வெளியிலும் ஒரு தனித்துவமான பிணைப்பைப் கொண்டுள்ளனர்.அவர்களது காதலுக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. இந்திய அணி பயணம் செய்யும் போது, குறிப்பாக நீண்ட சுற்றுப்பயணங்களில் விக்கெட் கீப்பர்-பேட்டர் இஷான் கிஷன் மற்றும் ஓப்பனர் ஷுப்மான் கில் ஆகிய இருவரும் சேர்ந்து இருக்கும் போது மகிழ்ச்சியாக சுற்றிக்கொண்டு இருப்பார்கள்.
இஷான் மற்றும் கில் இருவரும் கடந்த சில வருடங்களாக இந்திய அணியில் பல்வேறு போட்டிகளில் இடம்பெற்றுள்ளனர். இப்போது, நட்சத்திர வீரர் விராட் கோலி, கிஷன் மற்றும் கில்லின் காதலைப் பற்றித் ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார். அவர்கள் இருவரும் ஒரே மாதிரியான இரட்டையர்கள் என்று முத்திரை குத்தியுள்ளார்.
இரவு உணவு நேரமாக இருந்தாலும் சரி, டீம் விவாதமாக இருந்தாலும் சரி, இருவரும் சேர்ந்து இருப்பது மகிழ்ச்சியளிப்பதால், இருவரையும் பிரிப்பது கடினம் என்று கோஹ்லி கூறினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சீதா மற்றும் கீதா
“இது மிகவும் நகைச்சுவையானது. சீதா மற்றும் கீதா இடையே (இஷான் மற்றும் ஷுப்மான்). என்ன நடக்கிறது என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை. அதிகம் சொல்ல முடியாது, ஆனால் இவர்களால் சுற்றுப்பயணத்தின் போது தனியாக இருக்க முடியாது. நாங்கள் உணவுக்காக வெளியே வந்தால், அவர்கள் ஒன்றாக வருவார்கள். .டீம் மீட்டிங் போதும் அவர்கள் எப்போதும் ஒன்றாகவே இருப்பார்கள், நான் அவர்களை தனியாக பார்த்ததில்லை” என்று கோஹ்லி கூறினார்.
கில் மற்றும் கிஷன் இருவரும் தற்போது ஐபிஎல் 2024 சீசனில் விளையாடி வருகின்றனர்.
கடைசியாக மும்பை இந்தியன்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியது. அதில் இஷான் கிஷன் சிறப்பாக விளையாடி 34 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தார். இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இஷான் கிஷன் சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர ஒப்பந்தத்தில் இடம் பெறவில்லை. இந்திய கிரிக்கெட் வாரியம் இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோரை உள்நாட்டு போட்டிகளில் விளையாட வேண்டும் என கூறியது. ஆனால் அவர்கள் உள்நாட்டு போட்டிகளில் பங்கேற்கவில்லை. எனவே வருடாந்திர மத்திய காண்ட்ராக்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
மறுபுறம் ஐபிஎல் 2024ல் ஹர்திக் பாண்டியா வெளியேறியதைத் தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் அணியை கில் வழிநடத்தி வருகிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜ்ராஜ் டைட்டன்ஸ் வெற்றி பெற்றது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மான் கில் அதிரடியாக விளையாடி 72 ரன்கள் எடுத்தார்.
கடந்த வாரம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான தனது சதத்தை தவறவிட்ட கில் தற்போது மீண்டும் அரை சதம் அடித்துள்ளார்.
கோஹ்லியைப் பொருத்தவரை, ஐபிஎல் 2024ல் ஏற்கனவே சதம் அடித்ததன் மூலம் ஸ்கோரிங் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் அவர் 6 போட்டிகளில் 79.75 சராசரியில் 319 ரன்கள் எடுத்துள்ளார்.
இருப்பினும், RCB தனது முதல் ஆறு ஆட்டங்களில் ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்து தற்போது கடைசி இடத்தில் உள்ளது. RCB அணி அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் வரும் வியாழக்கிழமை விளையாட உள்ளது.