ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக் விவாகரத்து வதந்திகளுக்கு மத்தியில் மர்மப் பெண்ணுடன் ஹர்திக் பாண்டியாவின் வீடியோ வைரலாகிறது; ‘புதிய பாபி மில் கயி’ (புதிய அண்ணி கிடைத்து விட்டார்கள்) என்கிறார்கள் ரசிகர்கள்.
ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக் இருவரும் பிரிந்ததாக வதந்திகள் பரவி வருகிறது. எனவே வாழ்க்கையில் நடந்ததை மறந்து அடுத்த கட்டத்திற்கு போக வேண்டும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக்
கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது மாடல் மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் இன்னும் ஒன்றாக இருக்கிறார்களா? இல்லையா? என்ற கேள்வி இணையத்தில் உள்ள மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றாகும்.
இந்தியன் பிரீமியர் லீக் 2024 இன் போது ஹர்திக் பாண்டியா, நடாஷாவின் பிறந்த நாளிற்கு எந்த ஒரு வாழ்த்து செய்தியும் வெளியிடவில்லை. அப்போதுதான் முதன் முதலில் விவாகரத்து குறித்து வதந்திகள் வெளிவந்தன.
அதே போல நடாஷா அவர்களது திருமணப் படங்களை நீக்கியதைப் பற்றிய செய்தியும் பரவியது. ஆனால் பின்னர் அவை மீண்டும் தோன்றின. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அதே போல் மேலும் ஒரு நிகழ்வு நடந்தது. ஹர்திக் மற்றும் இந்திய கிரிக்கெட் அணி 2024 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையை வென்றதும், நாட்டில் உள்ள அனைவரும் இந்திய அணி மற்றும் ஹர்திக் பாண்டியவை வாழ்த்தியது. ஆனால் நடாஷா இந்திய அணி மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு எந்த ஒரு வாழ்த்தும் தெரிவிக்கவில்லை. எனவே வதந்திகள் வேகமாக பரவத் தொடங்கின.
பெண் ஒப்பனை கலைஞருடன் ஹர்திக் பாண்டியா வீடியோ!
இந்த நிலையில் ஹர்திக் ஒரு மர்மப் பெண்ணுடன் இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது, ரசிகர்கள் அவரை ‘புதிய பாபி’ (புதிய அண்ணி) என்று அழைக்கிறார்கள்.
அந்த மர்மப் பெண் உண்மையில் ஒரு டிஜிட்டல் படைப்பாளி மற்றும் ஒப்பனை கலைஞரான பிராச்சி சோலங்கி ஆவார். அவர் இன்ஸ்டாகிராம் தளத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவுடன் உள்ள வீடியோவை பகிர்ந்துள்ளார். இது பின்னர் சமூக ஊடகங்களில் பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர் பக்கங்களால் மறுபகிர்வு செய்யப்பட்டது.
அந்த போஸ்டில் பிராச்சி “CAN SOMEBODY PINCH ME PLEASEEEEEE🥹❤️@hardikpandya93 thank you for being so warm😇.” என பகிர்ந்துள்ளார்.
இதற்கிடையில், வீடியோவில் ஒரு செய்தி இருந்தது: “நான் உலகக் கோப்பை ஹீரோவை சந்தித்தபோது.” என்ற வாசகத்துடன் இருந்தது. அந்த வீடியோவில் கைகுலுக்கிய பிறகு, ஹர்த்திக்கும் பிராச்சியும் கேமராவுக்கு போஸ் கொடுத்து, தங்கள் பிரகாசமான புன்னகையை வெளிப்படுத்தினர். இருவரும் போல்கா-டாட் ஆடைகளில் இருந்தனர்,
ஹர்திக் பாண்டிய மற்றும் நடாஷா ஆகியோரிடம் இருந்து இது வரை எந்த ஒரு விளக்கமும் அதிகாரபூர்வமாக வெளி வரவில்லை. எனவே ஹர்திக் பாண்டியா ரசிகர்கள் அவசர படாமல் இருந்தால் நல்லது.
ஹர்திக் தற்போது தனது மகன் அகஸ்திய பாண்டியாவுடன் தரமான நேரத்தை செலவிட்டு வருகிறார்.
இதற்கிடையில் ஹர்திக் பாண்டியா ரசிகர்கள் புதிய அண்ணி கிடைத்து விட்டார்கள் மற்றும் ஹர்திக் பாண்டியாவை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.