இந்தியா vs இலங்கை தொடர் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்த மாதம் இந்தியா vs இலங்கை அணிகள் மோதும் T20I மற்றும் ODI போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் T20I தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ODI அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார். சுப்மன் கில் T20I மற்றும் ODI ஆகிய இரண்டு தொடரிலும் துணை கேப்டனாக செயல்படுவார்.
இந்தியா vs இலங்கை தொடர் இந்திய அணி விவரம்
T20I அணி: சூர்யகுமார் யாதவ் (C), சுப்மன் கில் (VC), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரின்கு சிங், ரியான் பராக், ரிஷப் பந்த் (WK), சஞ்சு சாம்சன் (WK), ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய் , அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது சிராஜ்.
ODI அணி: ரோஹித் சர்மா (C), சுப்மான் கில் (VC), விராட் கோலி, கேஎல் ராகுல் (WK), ரிஷப் பந்த் (WK), ஷ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.
ஹர்திக் பாண்டியா அதிர்ச்சி. சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமனம்.
ஹர்திக் பாண்டியா கடந்த 2023 ODI உலக கோப்பை போட்டிகளிலும் சமீபத்தில் நடந்த T20I உலக கோப்பை போட்டிகளிலும் துணை கேப்டனாக செயல்பட்டார். எனவே ரோஹித் சர்மா ஒய்வு பெற்ற பின் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்க படுவார் என எதிர் பார்க்கப்பட்டது.
ஆனால் புதிதாக தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்றுள்ள கவுதம் கம்பீர் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்க வேண்டாம் என சொன்னதாக தெரிகிறது. ஹர்திக் பாண்டியா அடிக்கடி காயம் காரணமாக அணியிலிருந்து விலகுவதால் அணியின் கேப்டனை அடிக்கடி மாற்ற வேண்டி இருக்கும். இது அடுத்து 2026 நடக்க உள்ள T20I உலக கோப்பைக்கு இந்திய அணியை தயார் செய்யவதில் முட்டுக்கட்டையாக இருக்கும் என கருதுகிறார்.
எனவே ஹர்திக் பாண்டியா ஏற்கனவே இருந்த துணை கேப்டன் பதவியிலிருந்தும் நீக்க பட்டிருக்கிறார். நேற்று ஹர்திக் பாண்டியாவிற்கு ஒரே நாளில் 2 அதிர்ச்சி சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. T20I கேப்டன் பதவி நிராகரிக்க பட்டிருக்கிறது மற்றும் நேற்று இன்ஸ்டாகிராமில் ஹர்திக் பாண்டியா தனது மனைவி நடாஷா வை பிரிந்துவிட்டதாக அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கைக்கவாட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் இந்த தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை. அதை தவிர துருவ் ஜூரல், அவேஷ் கான், முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே, சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா ஆகியோருக்கு இந்த தொடரில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமனம்
T20I போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். T20 உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு ரோஹித் சர்மா டி20 போட்டியில் இருந்து ஒய்வு பெற்றதை அடுத்து யார் கேப்டன் பொறுப்பு ஏற்பார்கள் என்று எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் பிசிசிஐ T20I அணிக்கு சூர்யகுமார் யாதவை நியமித்துள்ளது.
சூர்யகுமார் யாதவ் இது வரை 7 T20I போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமை தங்கியுள்ளார். இதில் 5 போட்டிகளில் வெற்றியும் 2 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் 4-1 என்ற கணக்கில் தொடரை இந்தியா வென்றது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளார்.
Also Read: ஐபிஎல்: கோலி மற்றும் நவீன் உல் ஹக் சண்டை. தவறு கோலி மீது தான். அமித் மிஸ்ரா கருத்து.
சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் மற்றும் விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்த் ஆகியோர் டி20 அணியில் சேர்க்கப்பட்டுளர்னர்.
ஒரு நாள் அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அணியில் இணைந்துள்ளனர். கேஎல் ராகுல், ஷ்ரேயஸ் ஐயர், குல்தீப் யாதவ் மற்றும் சிவம் துபே அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளனர்.
ரவீந்திர ஜடேஜா டி20 மற்றும் ODI என இரண்டு தொடரிலும் இடம் பெறவில்லை. இது இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவின் இடத்தை கேள்விக்குறியாகியுள்ளது.