WhatsApp Group Join Now
Telegram Group Join Now

இந்திய கிரிக்கெட் அணியின் பிரம்மாண்ட வெற்றி பேரணி!

மும்பையில் இந்திய கிரிக்கெட் அணியின் பிரம்மாண்ட வெற்றி பேரணி நடைபெற்றது.

17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி T20 உலக கோப்பையை வென்றுள்ளது. ஜூன் 29 ஆம் தேதியே இந்திய அணி இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி பட்டத்தை தட்டி சென்றது. 

இருப்பினும் மேற்கிந்திய தீவுகளில் ஏற்பட்ட புயல் காரணமாக விமான நிலையங்கள் மூட பட்டன. எனவே இந்திய அணி இந்தியா திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் சகஜ நிலை திரும்பிய பின் இந்திய அணி தனி விமானம் மூலம் நேற்று காலை டெல்லி வந்தடைந்தது.

Team India with Modi

பிறகு வீரர்கள் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தனர். நரேந்திர மோடி இந்திய அணியின் வெற்றியை வீரர்களோடு சேர்ந்து கொண்டாடினார்.

அதன் பிறகு இந்திய அணி வீரர்கள் மும்பைக்கு விமானம் மூலம் சென்றனர். அங்கு மிக பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்திலேயே கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. 

இந்திய கிரிக்கெட் அணியின் பிரம்மாண்ட வெற்றி பேரணி

மிக பிரம்மாண்டமான வெற்றி பேரணி மும்பையில் உள்ள கடற்கரை ஒட்டிய மெரைன் டிரைவ் பகுதியில் நடை பெற்றது. ரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் இந்திய வீரர்கள் திறந்த வகை சிறப்பு பேருந்தில் ஏறி பேரணியாக வந்தனர். ரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் இந்திய வீரர்கள் திறந்த வகை சிறப்பு பேருந்தில் ஏறி பேரணியாக வந்தனர்.

Huge crowd in merine drive

கடும் கூட்டம் காரணமாக பேருந்து மிக மெதுவாக ஊர்ந்து சென்றது. இறுதியாக மும்பையிலுள்ள வான்கடே மைதானத்திற்கு வீரர்கள் வந்து சேர்ந்தனர். அங்கு வீரர்கள் கையில் இந்திய தேசிய கொடி மற்றும் T20 உலக கோப்பையுடன் மைதானத்தை சுற்றி வந்தனர். அப்போது வீரர்கள் அனைவரும் ஆடி பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மும்பை ரசிகர்கள் அலை கடல் என திரண்டு வந்து இந்திய அணிக்கு ஆதரவை வழங்கினர். இந்த நிகழ்ச்சி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவருக்கும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக அமைந்தது.

அதன் பின் பேசிய விராட் கோலி பும்ராவை உலகின் 8வது அதிசயம் என வியந்து கூறினார். ரோஹித் சர்மா பேசும் போது ஹார்திக் பாண்டியவை குறிப்பிட்டு புகழ்ந்து பேசும் போது மொத்த வான்கடே மைதானமே எழுந்து பாராட்டு தெரிவித்தது. எந்த மும்பை ரசிகர்கள் ஐபில் போட்டிகளின் போது ஹார்திக் பாண்டியவை அவமதித்தனரோ அவர்களே ஹார்திக் பாண்டியவை நேற்று கொண்டாடி தீர்த்தனர்.

Leave a Comment