IPL 2024 playoff பந்தயத்தில் இருந்து அதிகார பூர்வமாக முதல் அணியாக வெளியேற்றப்பட்ட மும்பை இந்தியன்ஸ்.
ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றது. இதனை அடுத்து IPL 2024 Playoff பந்தயத்தில் இருந்து அதிகார பூர்வமாக முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் வெளியேறியுள்ளது. இன்னும் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு போட்டிகளில் விளையாட உள்ளது. மீதம் உள்ள இந்த போட்டிகளில் வென்று தற்போது உள்ள கடைசி நிலையிலிருந்து முன்னேற முயற்சி செய்யும்.
ஐபில் 2024 சீசன் தொடங்கும் முன் திடீரென ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். இது மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோஹித் சர்மா ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியது. அதே போல் அணிக்குள் வீரர்களிடமும் ஒருங்கிணைப்பு இல்லை என கருதப்படுகிறது.
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி IPL 2024 போட்டிகளில் முதல் 3 ஆட்டங்களில் தோல்வி அடைந்தது. தொடக்கமே ஹர்திக் பாண்டியா மற்றும் MI அணிக்கு பேரிடியாக விழுந்தது.ஹர்திக் பாண்டியா செல்லும் இடங்களில் எல்லாம் மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது வரை 12 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வென்று 8 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. புள்ளிகள் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 புள்ளிகளுடன் 9ஆவது இடத்தில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி 8 புள்ளிகளுடன் 10ஆவது இடத்தில் உள்ளது.
IPL 2024 Playoff பந்தயத்தில் இருந்து வெளியேறிய மும்பை இந்தியன்ஸ்
நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. இதில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி IPL 2024 போட்டிகளில் இருந்து வெளியேறிய முதல் அணியாக உள்ளது. இதனால் ஹர்திக் பாண்டியா மீதும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் மீதும் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இருப்பினும் மீதம் உள்ள இரண்டு போட்டிகளும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் அதில் உள்ள சில வீரர்களுக்கும் முக்கியமானதாக இருக்கும். T20 Worldcup 2024 போட்டிகள் வரும் ஜூன் 2ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் இந்திய அணியில் விளையாட உள்ளனர். எனவே வரும் வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதன் மூலம் நல்ல பார்ம்முடன் T20 உலக கோப்பைக்கு செல்ல முடியும்.