WhatsApp Group Join Now
Telegram Group Join Now

IPL 2025 ஏலத்திற்கு முன் சூடான விவாதம். அணிகளின் நிலைப்பாடு என்ன?

IPL  2025 தொடர்பான முன்னெடுப்புகள் தற்போது தொடங்கிவிட்டன. அடுத்த ஆண்டு ஐபில் 2025 க்கு முன் மெகா ஏலம் நடை பெற உள்ளது. தற்போது உள்ள ஐபில் விதிமுறைகள் படி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மெகா ஏலம் நடைபெறும். அந்த வகையில் ஐபில் 2025 க்கு முன் மெகா ஏலம் நடைபெறும். 

எனவே மெகா ஏலத்திற்கு முன் ஐபில் அணிகளின் உரிமையாளர்கள் நேற்று மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகத்தில் கூடி விவாதித்தனர். இந்த விவாதத்தின் முடிவில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இரு குழுக்கள் இரு வேறு துருவங்களாக உள்ளனர். அதை பற்றி இங்கு பார்க்கலாம்.

ஐபில் அணிகளின் சந்திப்புக் கண்ணோட்டம்:

வரவிருக்கும் 2025 மெகா ஏலத்தைப் பற்றி விவாதிக்க ஐபிஎல் உரிமையாளர்கள் சமீபத்தில் கூடினர்.

அதில் வீரர்கள் தக்கவைப்பு, ரைட் டு மேட்ச் (Right To Match) கார்டுகளின் பயன்பாடு மற்றும் பிற விதிமுறைகள் பற்றிய முக்கிய தலைப்புகளில் விவாதித்தனர். IPL அணிகளின் நிலைப்பாடு என்ன என்பதை கீழே பார்க்கலாம்.

IPL 2025 ஏலத்திற்கு முன் சூடான விவாதம்!

மெகா ஏலம் வேண்டாம்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH), சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) போன்ற அணிகள் மெகா ஏலம் வேண்டாம் என கூறினர். ஏனெனில் அவர்கள் வலுவான அணியினை வைத்துள்ளனர். மெகா ஏலம் நடந்தால் 4 வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும். எனவே மெகா ஏலம் வேண்டாம் என கூறுகின்றனர். மெகா ஏலம் 5 வருடங்களுக்கு ஒரு முறை என மாற்றலாம் எனவும் விரும்புகின்றனர்.

அதே சமயம் டெல்லி கேபிடல்ஸ் (டிசி) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்), லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்(LSG) போன்ற அணிகள் மெகா ஏலம் நடத்த வேண்டும் என கேட்கின்றனர். மெகா ஏலம் நடந்தால் தான் வலுவான வீரர்களை வாங்க முடியும் என்பது அவர்கள் கருத்து.

தக்க வைக்கும் வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH), சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) போன்ற அணிகள் வீரர்களை தக்க வைக்கும் எணிக்கையை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினர். 8 வீரர்கள் வரை தக்க வைக்க அனுமதிக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

காவ்யா மாறன் கூறும் போது “”ஒரு அணியை உருவாக்க நிறைய நேரம் தேவை படுகிறது. மேலும் இளைய வீரர்கள் தயார் செய்து முதிர்ச்சியடைய சிறிது காலமும் முதலீடும் தேவை. உதாரணமாக அபிஷேக் ஷர்மாவை தயார் செய்ய மூன்று வருடங்கள் எடுத்தது. இப்பொது நன்றாக விளையாட ஆரம்பித்து இருக்கிறார். இதே போல மற்ற அணிகளிலும் நிறைய பல உதாரணங்கள் உள்ளன.” எனவே அதிக வீரர்களை தக்க வைக்க வேண்டும் என விரும்புகிறார்.

ஆனால் அதற்கு நேர் மாறாக டெல்லி கேபிடல்ஸ் (டிசி) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்), லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்(LSG) அணிகள் தக்க வைக்கும் வீரர்களின் எணிக்கையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தினர். நல்ல வீரர்களை விடுவிக்கும் போது தான் மற்ற அணிகளுக்கும் நல்ல வீரர்களை தேர்வு செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்பது அவர்களின் வாதம்.

இம்பாக்ட் பிளேயர் விதி:

இம்பாக்ட் பிளேயர் விதி மீது குறிப்பிடத்தக்க விவாதம் நடந்துள்ளது. குறிப்பாக டெல்லி இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால் இம்பாக்ட் பிளேயர் விதியை நீக்க வேண்டும் என கூறியுள்ளார். 

அவர் கூறியதாவது “இளம் வீரர்களுக்கு ஐபிஎல்லில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்பதால் சிலர் அதை விரும்புகின்றனர். ஆல் ரவுண்டர்களின் வளர்ச்சியில் இந்திய கிரிக்கெட்டுக்கு கேடு விளைவிக்கும் என்பதால் சிலர் அதை விரும்பவில்லை. எனவே இங்கு இரு வேறு கருத்து உள்ளது. நான் இரண்டாவது முகாமில் இருக்கிறேன். எனக்கு அது வேண்டாம். 11 vs 11 என்ற விளையாட்டை நான் விரும்புகிறேன். ஆல்ரவுண்டர்கள் மிகவும் முக்கியமானவர்கள் என்று நினைக்கிறேன். இந்த விதியின் காரணமாக ஐபிஎல்லில் பந்துவீசாத அல்லது ஐபிஎல்லில் பேட்டிங் செய்யாத வீரர்கள் உங்களிடம் உள்ளனர், இது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல” என்று ஜிண்டால் கூறினார்.

ஏலம் எடுத்த பின் விளையாட வராத வீரர்களை தடை செய்ய வேண்டும்:

குறிப்பாக காவ்யா மாறன் ஒரு வீரரை ஏலத்தில் எடுத்த பின் எந்த ஒரு காரணத்திற்காகவும் (காயங்கள், மருத்துவ காரணங்கள் தவிர) அவர் விளையாட வரவில்லை என்றால் அவரை ஐபில் போட்டிகளில் பங்கேற்பதிலிருந்து தடை செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்தார். 

Also Read: IPL 2025: சிஎஸ்கே அணியில் தோனி விளையாடுவது சந்தேகம்?

IPL 2025 மெகா ஏலம்

இந்த வருடம் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், எம்.எஸ் தோனி போன்ற வீரர்களை அவர்கள் அணி தக்க வைக்குமா அல்லது அவர்கள் அணியிலிருந்து வெளியேறுவார்களா என தெரியவில்லை. எனவே நடை பெற இருக்கும் மெகா ஏலம் ரசிர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment