WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ஐபிஎல்: கோலி மற்றும் நவீன் உல் ஹக் சண்டை. தவறு கோலி மீது தான். அமித் மிஸ்ரா கருத்து.

அதில் ஐபிஎல் 2023 இல் கோலி மற்றும் நவீன் உல் ஹக் சண்டை பற்றி அமித் மிஸ்ரா நடந்தது என்ன என கூறியுள்ளார்.

முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா, ஷுபாங்கர் மிஸ்ரா என்பவர் நடத்தும் யூடியூப் சேனலுக்கு வழங்கிய பேட்டியில், பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். 

அதில் ஐபிஎல் 2023 இல் கோலி மற்றும் நவீன் உல் ஹக் சண்டை பற்றி அமித் மிஸ்ரா நடந்தது என்ன என கூறியுள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 இல், விராட் கோலி மற்றும் நவீன் உல் ஹக் இடையே தகராறு ஏற்பட்டது. பிறகு நடந்த ODI உலகக் கோப்பை 2023 இல் இந்தியா vs ஆப்கானிஸ்தான் மோதலின் போது இரு கிரிக்கெட் வீரர்களும் கைகுலுக்கி கொண்டனர். இதன் மூலம் ஐபில் 2023ல் நடந்த கசப்பான அனுபவத்திற்கு பிறகு எல்லாம் சரியாகி விட்டது என ரசிர்கர்கள் எண்ணினர்.

கடந்த ஆண்டு லக்னோவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸை (எல்எஸ்ஜி) தோற்கடித்த பிறகு இந்த சர்ச்சைக்குரிய சம்பவம் நடந்தது.

Also Read: ரோஹித் சர்மா ஓய்வு பற்றி அறிவிப்பு?

வழக்கமாக மேட்ச் முடிந்து இரு அணிகளும் கைகுலுக்கும் போது கோலி மற்றும் நவீன் இடையே சூடான வாக்குவாதம் ஏற்பட்டது, பின்னர், கம்பீர் விராட் கோலியை ஆவேசமாக எதிர்கொண்டார். இச்சம்பவத்தை அடுத்து, அவர்கள் மூவருக்கும் ஐபிஎல் நிர்வாகக் குழு அதிக அபராதம் விதித்தது.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா, தற்போது மைதானத்தில் என்ன நடந்தது என்பது குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில் நவீனுடன் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது நடந்த நிகழ்வுகளின் முழு சம்பவத்தையும் நினைவு கூர்ந்தார்.

கோலி மற்றும் நவீன் உல் ஹக் சண்டை முழு சம்பவம் பற்றி அமித் மிஸ்ரா

“இது அனைத்தும் பெங்களூரில் தொடங்கியது, அங்கு நாங்கள் (எல்எஸ்ஜி) ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் வென்றோம். வெற்றிக்கு பிறகு, கவுதம் கம்பீர் தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார். ரசிகர்கள் அதிகமாக கத்தியதால், அவர்களை அமைதியாக இருக்கும்படி சைகை செய்தார் கவுதம் கம்பீர். ஒருவேளை விராட் கோலிக்கு அது பிடிக்காமல் இருந்திருக்கலாம். இந்த விஷயம் அன்றைய ஆட்டத்தோடு முடிந்துவிட்டதாக நாங்கள் நினைத்தோம், ஆனால் கோஹ்லிக்கு அல்ல,” என்று மிஸ்ரா கூறினார்.

“அவர் எங்கள் வீரர்களை தவறாக பேச தொடங்கினார். அடுத்து லக்னோவில் நடந்த LSG vs RCB போட்டியில் ஆக்ரோஷமாக வீரர்களுடன் பேசினார். கைல் மியர்ஸுடன் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் கோலி அவரிடம் தவறாக நடந்து கொண்டார். நவீன் உல் ஹக் பந்துவீசும்போது, ​​​​அவரிடமும் வாக்குவாதம் செய்தார். பல விஷயங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் கோலி அதை செய்யவில்லை” என கூறினார்.

“நான் நவீனுடன் பேட்டிங் செய்யும் போது, ​​நான் கோலியிடம் ‘நீங்கள் யாருடன் பேசுகிறீர்கள், அவர் ஒரு இளைஞர், உங்கள் உயரத்திற்கு (தகுதிக்கு) அருகில் கூட இல்லை. என்ன நடந்ததோ அது நடந்துவிட்டது.” என கூறினேன்.  அதற்கு பதில் அளித்த கோலி, “இதை என்னிடம் கூறாதே, அவருக்கு புரிய வை” என கூறியதாக தெரிவித்தார்.

“ஆனால் பிரச்சனை ஆட்டத்திற்குப் பிறகு தொடங்கியது. வழக்கமான கைகுலுக்கலின் போது கோலி,  நவீன் உல் ஹக் இடம் மீண்டும் தவறாக பேச தொடங்கினார். அப்போதுதான் கம்பீர் குறுக்கிட்டு, ஆட்டம் முடிந்து நீங்கள் வெற்றி பெற்ற பிறகு ஏன் மீண்டும் தொடங்குகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். நான் கம்பீரை நகர்த்தினேன். ஆனால் நவீன் பின்னர் டிரஸ்ஸிங் அறைக்கு வந்து கோலி மீண்டும் தவறாக பேச தொடங்கினார் என்று கூறினார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐபிஎல் 2024 இல் இரு கிரிக்கெட் வீரர்களும் கைகுலுக்கி கொண்டதைக் கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். எனவே அனைத்து பிரச்சனையும் முடிவுக்கு வந்ததாக தோன்றுகிறது.

இதை தவிர அமித் மிஷ்ரா அந்த பேட்டியில் ஐபில் 2023ல் LSG ஓனர் சஞ்சய் கோயங்கா கேஎல் ராகுல் இடையே நடந்த வாக்குவாதம் மற்றும் ஸுப்மன் கில் கேப்டன்ஷிப் பற்றிய பார்வை என பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.

Leave a Comment