இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் இந்த வருட பி சி சி ஐ மத்திய ஒப்பந்த (Central Contract) பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் பி சி சி ஐ கிரிக்கெட் வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்தத்தை வெளியிட்டனர். அதன்படி வீரர்களின் பெயர் பட்டியல் கீழே குடுக்கப்படுள்ளது
A+ கிரேடு: ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா
A கிரேடு: ஆர் அஷ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ், கேஎல் ராகுல், ஷுப்மான் கில், ஹர்திக் பாண்டியா
B கிரேடு: சூர்ய குமார் யாதவ், ரிஷப் பந்த், குல்தீப் யாதவ், அக்சர் படேல், யஷஸ்வி ஜெய்ஸ்வால்
C கிரேடு: ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷர்துல் தாக்கூர், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், ஜிதேஷ் ஷர்மா, வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கேஎஸ் பாரத், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், ரஜத் படிதார்
அதை தவிர ஆகாஷ் தீப், விஜய்குமார் வைஷாக், உம்ரான் மாலிக், யாஷ் தயாள் மற்றும் வித்வத் கவேரப்பா ஆகிய விளையாட்டு வீரர்களுக்கான வேகப்பந்து வீச்சு ஒப்பந்தங்களையும் தேர்வுக் குழு பரிந்துரைத்துள்ளது.
இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் அதிரடி நீக்கம்
இந்நிலையில் கடந்த சீசனில் கிரேடு C பட்டியலில் இருந்த இஷான் கிஷன் மற்றும் கடந்த சீசனில் B கிரேடில் இருந்த ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
எந்த ஒரு வீரர் இந்திய அணிக்கு விளையாடாமல் மற்றும் உடல் தகுதியுடன் இருந்தால் கண்டிப்பாக உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என பிசிசிஐ அறிவித்திருந்தது. ஆனால் இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் இந்த உத்தரவை மதிக்காமல் உள்ளூர் ரஞ்சி ட்ராபி போட்டிகளில் பங்கேற்கவில்லை. எனவே BCCI இந்த முடிவை எடுத்துள்ளது.
BCCI முடிவுக்கு கபில் தேவ் பாராட்டு
இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் முன்னாள் இந்திய அணி கேப்டனும் உலக்கோப்பை வென்ற கேப்டனுமான கபில் தேவ் பிசிசிஐ க்கு பாராட்டு தெரிவுத்துளார்.
BCCI யின் இந்த முடிவு வரவேற்கதக்கது. எந்த வீரரும் நாட்டை விட, கிரிக்கெட்டை விட பெரியவர்கள் கிடையாது. இந்த முடிவால் சில வீரர்கள் பாதிக்க படுவார்கள். ஆனால் BCCI யின் இந்த முடிவு வரவேற்க படவேண்டியதாகும். என கூறினார்.
உள்நாட்டு கிரிக்கெட்டை பாதுகாக்க பிசிசிஐ எடுத்த இந்த நடவடிக்கையை பாராட்டுகிறேன். ஒரு வீரர் சர்வேதச போட்டிகளில் விளையாடிய உடன் உள்நாட்டு போட்டிகளை புறக்கணிப்பதை நினைத்து வேதனை அடைகிறேன். ஒரு வீரரை வளர்க்க உதவிய உள்நாட்டு போட்டிகளுக்கு சர்வதேச வீரர்கள் தங்கள் பங்களிப்பை திருப்பி அளிக்க வேண்டும். அதன் மூலம் உள்நாட்டு போட்டிகள் வலுப்பெறும். சர்வதேச வீரர்கள் விளையாடும் போது அது இளம் வீரர்களுக்கு பயிற்சியாக அமையும் என கூறினார்.
பிசிசிஐ யின் இந்த முடிவு நல்ல ஒரு தொடக்கமாகும். பொதுவாக இந்திய அணிக்கு விளையாடும் வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதை தவிர்த்து விடுகின்றனர். இனிமேல் இந்திய அணிக்கு விளையாடும் வீரர்கள் சர்வதேச போட்டிகள் இல்லாத சமயத்தில் கண்டிப்பாக ரஞ்சி ட்ராபி போன்ற உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும். அவ்வாறு விளையாடும் போது அது இளம் வீரர்களுக்கு அனுபவத்தை கொடுக்கும். சர்வதேச கிரிக்கெட்டில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் தங்கள் அனுபவங்களை இளம் வீரர்களுடன் பகிர்ந்துகொள்ள வாய்ப்பாக அமையும்.