WhatsApp Group Join Now
Telegram Group Join Now

இந்தியா vs தென் ஆப்பிரிக்கா – ரோஹித் ஷர்மாவின் கேப்டன்ஷிப் குறித்து ஜஸ்பிரிட் பும்ராவின் கருத்து!

ரோஹித் ஷர்மாவின் கேப்டன்ஷிப் குறித்து ஜஸ்பிரிட் பும்ராவின் கருத்து! டி20 உலகக் கோப்பை 2024 இறுதிப் போட்டி இன்று ஜூன் 29 நடைபெற உள்ளது. பார்படாஸில் உள்ள பிரிட்ஜ்டவுனில் இந்த போட்டி நடைபெறும். கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று இரவு இந்திய நேரப்படி 8 மணிக்கு துவங்க உள்ளது. இதில் இந்தியா தென் ஆப்பிரிக்காவுடன் மோத உள்ளது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இந்த T20 உலகக்கோப்பையில் குரூப் ஸ்டேஜ் மற்றும் சூப்பர் 8 போட்டிகளிலும் இது வரை ஒரு போட்டியில் கூட தோற்காமல் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

ரோஹித் ஷர்மாவின் கேப்டன்ஷிப் குறித்து ஜஸ்பிரிட் பும்ராவின் கருத்து

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா கேப்டன் ரோஹித் ஷர்மாவை புகழ்ந்துரைத்துள்ளார். 37 வயதான ரோஹித் ஷர்மா இந்த தொடரில் அபாரமாக விளையாடி வருவதாக அவர் கூறியுள்ளார். நடந்து வரும் டி20 உலகக் கோப்பை 2024 தொடரில், ரோஹித் ஷர்மா தற்போது மூன்றாவது அதிக ரன்கள் எடுத்த வீரராக இருக்கிறார். 

இது வரை நடைபெற்ற ஏழு போட்டிகளில் விளையாடி 248 ரன்கள் எடுத்துள்ளார். அதே சமயம் 155.97 ஸ்ட்ரைக் ரேட்டில் அதி வேகமாக ரன்களை எடுத்துள்ளார். இவ்வாறு இவர் கொடுக்கும் அதிரடி துவக்கம் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக உள்ளது.

ஐசிசி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள காணொளி ஒன்றில் பேசிய bumra, 2023 ஆம் ஆண்டின் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளிலும் ரோஹித் ஷர்மா மிகவும் ஆக்ரோஷமாக இருந்தார் என்று கூறினார். மேலும், இந்திய கேப்டன் தனது வீரர்களுக்கு நிறைய சுதந்திரம் அளிப்பதாக பும்ரா தெரிவித்தார்.

பும்ரா கூறியதாவது “ரோஹித் ஷர்மா அபாரமாக விளையாடுகிறார். முந்தைய உலகக் கோப்பையிலும் கூட, அவர் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தார். அவர் வீரர்களுக்கு நிறைய சுதந்திரம் அளித்தார். வீரர்கள் சுயமாக முடிவு எடுக்க அனுமதித்தார். அதே நேரம் உதவி தேவை அல்லது மாற்று முடிவு எடுக்க சரியான நேரம் என்று அவர் உணரும்போது, அவர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்வார். எனவே, அவரது தலைமையில் விளையாடுவது மிகவும் சிறப்பாக இருக்கிறது, அணியின் நம்பிக்கையும் மிகவும் அதிகமாக உள்ளது,” என்று பும்ரா கூறினார்.

தென்னாப்பிரிக்காவும் இந்தியாவும் இந்த தொடரில் இதுவரை தோல்வி அடையாவிட்டாலும் முரண்பட்ட பயணத்தை மேற்கொண்டன. ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து போன்ற வலுவான அணிகளை கூட மிக எளிதாக மற்றும் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஆனால் தென்னாப்பிரிக்க அணி பல சமயங்களில் இறுதிப் போட்டிக்கு செல்லும் வழியில் பல சவால்களை கடந்து வந்துள்ளது. குரூப் ஸ்டேஜில் வங்காளதேசம் மற்றும் நேபாள அணிகள் அவர்களுக்கு கடும் சவால் கொடுத்தன. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சூப்பர் 8 ன் இறுதிப் போட்டியில், 123 ரன்கள் என்ற திருத்தப்பட்ட இலக்கை துரத்தும் போது அவர்கள் கிட்டத்தட்ட வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இன்று நடைபெற உள்ள இறுதி போட்டியில் இந்திய அணியில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது. வெற்றி கூட்டணியை இந்திய அணி மாற்ற விரும்ப மாட்டார்கள் எனபதே அனைவரின் கருத்து.

இந்திய அணி:

  • ரோஹித் ஷர்மா (கேப்டன்) , விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ராஹ், யுஸ்வேந்திர சஹால், சஞ்சு சாம்சன், முகமது சிராஜ், யஷஸ்வி ஜெயஸ்வால்

Leave a Comment