KKR Mentor பதவி தற்போது காலியாக உள்ளதால் அந்த இடத்தை நிரப்ப KKR நிர்வாகம் முயன்று வருகிறது.
டி20 உலகக் கோப்பை 2024 வெற்றியைத் தொடர்ந்து ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், புதிய இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கவுதம் கம்பீர் KKR அணியின் வழிகாட்டியாக (Mentor) இருந்தார். தற்போது கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளதால் அவரால் KKR அணியில் பணியாற்ற முடியாது. எனவே அவரது இடத்தை நிரப்ப KKR நிர்வாகம் தீவிர முயற்சியில் உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் வரவிருக்கும் இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இருந்து தனது பணியை தொடங்க உள்ளார்.
இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவர்களின் வழிகாட்டியை (கவுதம் கம்பீர்) இழந்துள்ளது. அதே போல KKR அணியின் மற்றொரு பயிற்சியாளரான அபிஷேக் நாயர் இந்திய அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக தேர்வு செய்ய படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் விளைவாக, KKR 2025 சீசனில் தங்கள் பயிற்சி ஊழியர்களை மறுசீரமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. KKR நிர்வாகம் பல பெயர்களை பரிசீலனை செய்து வருகிறது. அதில் ராகுல் டிராவிடும் ஒருவர் என்று வதந்தி பரவிய நிலையில், தென்னாப்பிரிக்காவின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் ஜாக் காலிஸை KKR ஆராய கூடும் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. எனவே KKR Mentor யார் என்ற அறிய அனைவரும் ஆர்வமுடன் உள்ளனர்.
KKR Mentor யார்?
காலிஸ் முன்பு KKR அணியின் ஒரு அங்கமாக இருந்தவர். கம்பீரின் தலைமையின் கீழ் 2012 மற்றும் 2014 இல் ஐபிஎல் பட்டத்தை வென்ற போது அணியில் ஒரு வீரராக விளையாடினார். பின்பு, காலிஸ் 2015 சீசனில் KKR இன் பேட்டிங் ஆலோசகராகவும் இருந்தார்.
காலிஸ் 2019 வரை நான்கு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசன்களுக்கு KKR தலைமை பயிற்சியாளராக இருந்தார். பின்பு அவர் தனது பதவியில் இருந்து விலகி, தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் பேட்டிங் ஆலோசகராக சேர்ந்தார்.
மேலும் இங்கிலாந்து தலைமை பயிற்சியாளராக ட்ரெவர் பெய்லிஸ் ராஜினாமா செய்த பிறகு அவர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
தி டெலிகிராப் செய்தி நிறுவனம், கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியில் தலைமைப் பயிற்சியாளராக இணைவதால், கேகேஆர் பயிற்சி அமைப்பில் காலிஸ் மீண்டும் வரலாம் என்று செய்தி வெளியிட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் KKR க்கு பயிற்சியளித்த புகழ்பெற்ற தென்னாப்பிரிக்க ஆல்-ரவுண்டர் ஜாக் காலிஸின் பெயரும் சுற்றி வருகிறது, என அறிக்கை கூறுகிறது.
KKR Mentor யார்? ராகுல் ட்ராவிடா அல்லது காலிசா அல்லது வேறு ஒருவரா என்பது கூடிய விரைவில் தெரிய வரும்.