WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ஐபிஎல் 2025: எல்எஸ்ஜி அணியில் இருந்து வெளியேறும் கேஎல் ராகுல்

எல்எஸ்ஜி அணியில் இருந்து வெளியேறும் கேஎல் ராகுல்?

2025 இந்தியன் பிரீமியர் லீக் சீசன் தொடங்குவதற்கு முன், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல், LSG அணியிலிருந்து வெளியேறுவது குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

ஐபில் 2025 மெகா ஏலம்

ஐபிஎல் 2025 க்கு முன்னதாக இந்த முறை ஐபில் 2025 மெகா ஏலம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் ஷர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல்  மற்றும் ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட சில பெரிய வீரர்கள் வேறு அணிகளுக்குச் செல்ல வாய்ப்புள்ளது.

கேஎல் ராகுல் விளையாடிய ஐபில் அணிகள்

கேஎல் ராகுல் ஐபிஎல் பயணம் 2013 இல் RCB உடன் தான் தொடங்கியது. பின்னர் பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் ஆகிய அணிகளுக்கு விளையாடியுள்ளார். 

2022 ஆண்டு முதல் KL ராகுல் LSG அணிக்காக விளையாடி வருகிறார். 2022 ஆம் ஆண்டு நடந்த மெகா ஏலத்தில் 17 கோடி ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. 

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு LSG அணியின் கேப்டனாக அணியை பிளே ஆஃப் வரை அழைத்து சென்றார். ஆனால் இரண்டு முறையும்  நாக் அவுட் சுற்றுகளில் வெளியேறியது.

2024 சீசன் LSG அணிக்கு மோசமான தொடராக இருந்தது. புள்ளிகள் பட்டியலில் LSG அணி ஏழாவது இடத்தைப் பிடித்து வெளியேறியது. 

எல்எஸ்ஜி அணியில் இருந்து வெளியேறும் கேஎல் ராகுல்?

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபில் போட்டியின் போது ராகுலுக்கும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா இடையிலான வாக்குவாதம் காரணமாக, அவர்களிடேயே நட்பு மோசமானதாக டைனிக் ஜாக்ரனின் அறிக்கை தெரிவிக்கிறது.

இருவரும் கருத்து வேறுபாடுகள் இல்லை என மறுத்த போதிலும், இந்த சம்பவம் அவர்களுக்கு இடையே ஒரு இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது. 

3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் ஐபில் மெகா ஏலம் இந்த ஆண்டு நடை பெற உள்ளது. வரவிருக்கும் மெகா ஏலத்திற்கு முன் கேஎல் ராகுலை LSG அணி  கேப்டனாகத் தக்கவைத்துக் கொள்ளுமா என்பது நிச்சயமற்றதாகவே உள்ளது.

இந்த நிலையில் KL ராகுல் LSG அணியிலிருந்து விலக விரும்புவதாக தகவல் தெரிவிக்கிறது. 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு திரும்பும் கேஎல் ராகுல்

இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி கேஎல் ராகுலை தங்கள் அணியில் தேர்வு செய்ய விரும்புவதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. ஐபிஎல் 2025 இல் பெங்களூரு அணியின் (ஆர்சிபி) கேப்டனாக ஃபாஃப் டு பிளெசிஸுக்குப் பதிலாக கர்நாடகாவை சேர்ந்த கேஎல் ராகுல் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. 

அவரது ஐபிஎல் பயணம் 2013 இல் RCB உடன் தான் தொடங்கியது. பின்னர் பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் ஆகிய அணிகளுக்கு விளையாடியுள்ளார். 

பெங்களூருவை சேர்ந்த ராகுல், உள்நாட்டு கிரிக்கெட்டில் கர்நாடகா அணிக்காக விளையாடி வருகிறார். 

சென்ற ஆண்டு (2024) ஐபில் போட்டிகளில் கேஎல் ராகுல் 14 போட்டிகளில் விளையாடி 136.13 ஸ்ட்ரைக் ரேட்டில் 520 ரன்கள் எடுத்தார். இருப்பினும் LSG அணியை பிளே ஆஃப் கொண்டு செல்ல முடியவில்லை. 

டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் இருந்து நீக்கப்பட்ட கேஎல் ராகுல், தற்போது இலங்கை  சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஒரு நாள் (ODI) அணியில் இடம் பெற்றுள்ளார். 

Also Read: புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சம்பளம் மற்றும் சலுகைகள் விவரங்கள்!

ஐபில் 2025 க்கு முன் மெகா ஏலம் நடைபெற உள்ளதால் ஐபில் அணிகளில் பல மாற்றங்களை பார்க்கலாம். ரோஹித் சர்மா கடந்த ஆண்டு மும்பை கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதன் காரணமாக ரோஹித் சர்மா அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. எனவே அவரும் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விலக வாய்ப்புள்ளது.

Leave a Comment