WhatsApp Group Join Now
Telegram Group Join Now

இலங்கை ODI தொடரில் பங்கேற்க கம்பீர் கோரிக்கை. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி மறுப்பு?

இலங்கை ODI தொடரில் பங்கேற்க கம்பீர் கோரிக்கை. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி மறுப்பு?

இந்த மாத தொடக்கத்தில், PTI வெளியிட்ட  செய்தியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இலங்கை ஒருநாள் தொடரை புறக்கணிக்க போவதாக செய்தி வெளியிட்டு இருந்தது. டி20 உலக கோப்பைக்கு பிறகு ஒரு நீண்ட இடைவெளி வேண்டும் என பிசிசிஐக்கு கோரிக்கை வைத்ததாக பிடிஐ செய்தி வெளியிட்டது.

2024 ஐபிஎல் சீசன் மற்றும் டி20 உலக கோப்பை என கடந்த மூன்று மாதங்கள் கடுமையாக விளையாடிய காரணத்தால் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் ஒருநாள் தொடரைத் தவிர்ப்பார்கள் என்று செய்தி நிறுவனம் PTI தெரிவித்துள்ளது.

மிக நீண்ட காலத்திற்கு பிறகு டி20 உலகக் கோப்பை பட்டத்தை வென்றதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி வெல்ல வேண்டும் என இந்தியா விரும்புகிறது. 

இந்த நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடை பெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கு முன் இந்தியா இரண்டு ஒரு நாள் போட்டி (ODI) தொடர்களில், மொத்தம் ஆறு ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளது.

முதல் ஒரு நாள் போட்டி தொடர் இலங்கை அணிக்கு எதிராக ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. மற்றொன்று 2025 பிப்ரவரி முதல் வாரத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறு உள்ளது.

இதற்கிடையில் இந்தியா செப்டம்பர் முதல் ஜனவரி வரை 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. எனவே வர இருக்கும் கடுமையான பனி சுமையை கருத்தில் கொண்டு ரோஹித் சர்மா, ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் விராட் கோலி ஆகியோர் நீண்ட பிரேக் எடுக்க விரும்புகின்றனர்.

கம்பீர் கோரிக்கை. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி மறுப்பு

இருப்பினும், புதிதாக நியமிக்கப்பட்ட இந்திய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், நடை பெற இருக்கும் இலங்கைக்கு எதிரான ODI தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் விளையாட வேண்டும் என்று விரும்புகிறார். 

ஆனால் தற்போது இந்த மூவரும் அவர்கள் குடும்பத்துடன் வெளிநாட்டில் ஓய்வில் இருப்பதாக தெரிகிறது. இலங்கை  தொடர்களுக்கான அணியை இந்த வாரம் பிசிசிஐ அறிவிக்கவுள்ள நிலையில், மூவரிடமும் அணிக்கு திரும்புமாறு கம்பீர் கோரிக்கை வைத்துள்ளார் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

ஆனால் கவுதம் கம்பீர் கோரிக்கைக்கு இது வரை விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் பதில் அளிக்கவில்லை என தெரிகிறது. இன்று அல்லது நாளை அணி தேர்வு நடைபெற உள்ள நிலையில், அவர்களின் முடிவு என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Also Read: சவுரவ் கங்குலி பதிலடி: ரோஹித் ஷர்மாவை கேப்டன் ஆக்கியது நான் தான்

சாம்பியன்ஸ் டிராபிக்கு முன் இந்தியா 6 ஆட்டங்களில் மட்டுமே விளையாடு உள்ளது. இந்த ஆண்டு ODI போட்டியில் இலங்கை தொடரில் மட்டுமே இந்தியா விளையாட உள்ளது. மேலும் இலங்கைக்கு அணிக்கு எதிரான தொடருக்கு பிறகு டெஸ்ட் போட்டிகள் தொடங்க 6 வாரங்கள் இருக்கிறது. எனவே அந்த இடைவெளி ஒய்வு எடுக்க போதுமானது என்பது கம்பீர் கருத்து.

மேலும் இது தலைமை பயிற்சியாளராக கம்பீர் அவர்களின் முதல் தொடர். எனவே, ஐசிசி போட்டிக்கான தயாரிப்பில் தனது பதவிக்காலத்தின் தொடக்கத்திலிருந்தே சிறப்பாக செயல்பட வேண்டும் என கம்பீர் விரும்புகிறார்.

இதற்கிடையில், தனிப்பட்ட காரணங்களுக்காக ஹர்திக் பாண்டியாவும் ஒருநாள் தொடரில் பங்கேற்க மாட்டார் என்றும் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. 50 ஓவர் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பை கே.எல்.ராகுல் ஏற்கக்கூடும் என நம்பப்படுகிறது.

Leave a Comment