ரோஹித் சர்மா ஓய்வு பற்றி அறிவிப்பு?

T20I களில் இருந்து வெளியேறிய பிறகு, ரோஹித் சர்மா ஓய்வு திட்டத்தை பற்றி பேசியுள்ளார்.

ரோஹித் ஷர்மா அமெரிக்காவில் நடந்த ஒரு நிகழ்வின் போது தனது ஓய்வு குறித்த கேள்விக்கு தெளிவான ஒரு விளக்கத்தை கொடுத்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை வெற்றியைத் தொடர்ந்து, கடந்த மாதம் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தாங்கள் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

பார்படாஸில் நடந்த இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து, 11 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி கோப்பையை வென்றனர்.

விராட் கோஹ்லி இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதைப் பெறும் போது சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதை உறுதி செய்த நிலையில், போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பின் போது சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெறுவது குறித்து அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மற்ற டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் ரோஹித்தின் எதிர்காலம் குறித்த ஊகங்கள் மற்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

Also Read: சவுரவ் கங்குலி பதிலடி: ரோஹித் ஷர்மாவை கேப்டன் ஆக்கியது நான் தான்

ரோஹித் சர்மா ஓய்வு எப்போது?

ஒரு மாத இடைவெளிக்கு பிறகு ஞாயிற்று கிழமை ரோஹித் சர்மா மீண்டும் அமெரிக்கா சென்றார். அங்கு டல்லாஸில் கிரிக்கெட் அகாடமி தொடங்குவதற்காக சென்றிருந்தார். அப்போது அங்கு கூடியிருந்த ரசிகர்கள் ரோஹித் சர்மாவிடம் பல கேள்விகளை எழுப்பினர்.

அப்போது ரோஹித் சர்மா ஓய்வு பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரோஹித் சர்மா “நான் முன்பே கூறியுளேன். நான் நீண்ட நாட்களுக்கு முன்பே யோசிக்க கூடியவன் இல்லை. ஆனால் கண்டிப்பாக நான் இன்னும் சிறிது காலம் விளையாடுவதை பார்ப்பீர்கள்” என கூறினார். 

““I just said it. I don’t look that far ahead. So clearly, you will be seeing me play at least for a while,”

ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் புள்ளிவிவரங்கள்

ரோஹித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில்159 ஆட்டங்களில் 4231 ரன்களுடன், அதிக ரன்கள் அடித்த வீரர் ஆவார். சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சதங்கள் (ஐந்து) அடித்தவர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். அவர் இரண்டு T20 உலகக் கோப்பைகளை வென்றுள்ளார்: 2007 இல் நடந்த முதல் டி20 உலககோப்பை மற்றும் தற்போது 2024 இல் நடை பெற்ற டி20 உலககோப்பை என இரண்டு முறை வென்றுள்ளார்.

ரோஹித் சர்மா ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவாரா?

இந்த ஆண்டு 37 வயதை எட்ட இருக்கும் ரோஹித், தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி பகுதியில் உள்ளதை மறுக்க முடியாது. இருப்பினும், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, அடுத்த ஆண்டு குறைந்தபட்சம் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி வரை ரோஹித் தலைமையில் இருப்பார் என்று ரசிகர்களுக்கு உறுதியளித்துள்ளார்.

2025 சாம்பியன்ஸ் டிராபியில் ரோஹித் அணியை வழிநடத்த உள்ளார் என்றும், அடுத்த WTC தொடர் வரை தனது கேப்டன் பதவியை தொடருவார் என்றும் ஷா சமீபத்தில் உறுதிப்படுத்தினார்.

இந்தியன் பிரீமியர் லீக்கில் டி20 வடிவத்தில் ரோஹித் தொடர்ந்து விளையாடுவார்.

இந்தியா vs இலங்கை தொடர்

ரோஹித், கோஹ்லி மற்றும் ஜடேஜா இன்னும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் வடிவங்களில் தொடர்ந்து விளையாடுவார்கள். இருந்தாலும், இந்த மாத இறுதியில் இந்தியா இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்யும் அணியில் இடம் பெறுவார்களா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் வழிநடத்துவார்.

Leave a Comment