விராட் கோலி ஸ்ட்ரைக் ரேட் குறித்து சஞ்சய் மஞ்சரேகர் விமர்சனம்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சரேகர், இந்தியாவின் டி20 உலகக் கோப்பை வெற்றியில் விராட் கோஹலிக்கு இருந்த பங்களிப்பைப் பற்றி புதிய விவாதத்தைத் கிளப்பியுள்ளார்.
விராட் கோலி சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை இறுதி 59 பந்துகளில் 76 ரன்கள் (128.81 ஸ்ட்ரைக் ரேட்) எடுத்தார். இந்திய அணி வெற்றி பெற்றவுடன் இறுதி போட்டியில் சிறந்த வீரராகவும் தேர்வு செய்யப்பட்டார். இது பற்றி கூறிய சஞ்சய் மஞ்சரேகர் கோலியின் இந்த மெதுவான ஆட்டம் இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கும் என கூறினார்.
விராட் கோலி ஸ்ட்ரைக் ரேட் குறித்து சஞ்சய் மஞ்சரேகர் விமர்சனம்.
கோலியின் பொறுமை மற்றும் எச்சரிக்கையான அணுகுமுறை பெரிய ஹிட்டர் ஹார்டிக் பாண்டியாவுக்கு விளையாடும் வாய்ப்பைக் குறைத்தது என்று மஞ்சரேகர் கூறினார். “பொறுமையாக விளையாடியதன் மூலம் பெரிய ஹிட்டரான ஹர்திக் பாண்டியா இரண்டு பந்துகளை மட்டுமே எதிர்கொண்டார்,” என்று அவர் கூறினார். “இந்தியாவின் பேட்டிங் அருமையாக இருந்தது, ஆனால் கோலியின் இன்னிங்ஸ் இந்தியாவை இக்கட்டான நிலையில் வைத்திருந்தது என கூறினார்.
தென் ஆப்பிரிக்கா சேஸ் செய்யும் போது இந்தியா பரிதாப நிலையில் இருந்ததையும், வலுவான முடிவு தேவைப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்திய பந்துவீச்சாளர்கள் தான் இறுதியில் வெற்றியை உறுதி செய்தார்கள். விராட் கோலி அதிரடியாக விளையாடி இருந்தால் போட்டியின் தோற்றத்தை மாற்றியிருக்க முடியும் என்று நம்புகிறார். “பந்துவீச்சாளர்கள் தான் விராட் இன்னிங்ஸை காப்பாற்றினார்கள்,” என்று அவர் கருத்து தெரிவித்தார். இந்தியாவின் பந்துவீச்சாளர் ஒருவர் தான் ஆட்ட நாயகன் விருதுக்கு தகுதியானவர் என்று பரிந்துரைத்தார்.
Also Read: இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகை! ஜெய் ஷா அறிவித்தார்.
டி20 கிரிக்கெட்டில் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் பற்றிய நீண்டகால விவாதத்தை இது மீண்டும் தூண்டிவிட்டுள்ளது. மஞ்சரேகர் முன்னதாக கோலியின் அணுகுமுறையை விமர்சித்து, டி20 கிரிக்கெட்டில் அதிரடியான தாக்குதல் பாணியை விரும்பினார். இருப்பினும், கோலியின் ஆதரவாளர்கள், அவரது அனுபவமும், இன்னிங்ஸை நிலைப்படுத்துவதற்கான திறமையும் மதிப்புமிக்கவை என்று வாதிடுகின்றனர்.
எனவே மீண்டும் விராட் கோலி ரசிகர்கள் மற்றும் மஞ்சரேகர் இடையே விவாதம் தொடர்கிறது. ஆனால் ஒட்டு மொத்தமாக விராட் கோலியின் டி20 புள்ளி விவரங்களை பார்த்தால், டி20 போட்டிகளில் அவருடைய ஆளுமையை தெரிந்து கொள்ளலாம்.
டி20 போட்டிகளில் அதிக ஸ்ட்ரைக் ரேட் அவசியம் என்றாலும் சில நேரங்களில் நிலைமைக்கு ஏற்றார் போல் விளையாட வேண்டும். டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் குறுகிய நேரத்திலேயே 3 விக்கெட்கள் வீழ்ந்ததால் இன்னிங்ஸை நிலைப்படுத்துவது என்பது மிக முக்கியமானது.
ஒரு வேலை இந்தியா தோற்றிருந்தால் விராட் கோலியின் இன்னிங்ஸ் பற்றி மிக பெரிய சர்ச்சை உண்டாகியிருக்கும். எனவே பந்துவீச்சாளர்களின் சிறப்பான செயல்பாட்டால் தான் இந்தியா வென்று விராட் கோலியை காப்பாற்றியுள்ளது என மஞ்சரேக்கர் கூறியுள்ளார்.
ஆனால் தற்போது விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டார். எனவே டி20 போட்டிகளில் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் பற்றி விவாதம் தேவை அற்றது.