WhatsApp Group Join Now
Telegram Group Join Now

சவுரவ் கங்குலி பதிலடி: ரோஹித் ஷர்மாவை கேப்டன் ஆக்கியது நான் தான்

பிசிசிஐயின் முன்னாள் தலைவரும், பிரபல இந்திய கேப்டனுமான சவுரவ் கங்குலி, தன்னை விமர்சிப்பவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ரோஹித் ஷர்மாவை இந்திய அணியின் கேப்டனாக நியமித்ததற்காக, தான் சந்தித்த விமர்சனங்களை நினைவுகூர்ந்த கங்குலி, ரோஹித் சர்மாவின் கீழ் இந்திய அணியின் வெற்றியைப் பார்க்குமாறு விமர்சகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 2024 டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது. இந்திய கிரிக்கெட் அணி இறுதியாக 2013 சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்குப் பிறகு ஐசிசி போட்டியில் பட்டம் வென்று சாதனை படைத்தது.

எம்எஸ் தோனிக்கு பிறகு ரோஹித் சர்மா தான்  இந்தியாவுக்கு ஐசிசி கோப்பையை பெற்று தந்துள்ளார். விராட் கோலி கேப்டனாக இந்தியாவுக்கு ஐசிசி பட்டத்தைப் பெற்றுத் தர முடியவில்லை. எனவே 2021 ஆண்டு அப்போதைய பிசிசிஐ (BCCI) தலைவரான சவுரவ் கங்குலி, கேப்டன் பொறுப்பை விராட் கோலியிடம் இருந்து ரோஹித் ஷர்மாவிடம் ஒப்படைத்தார். இந்த நடவடிக்கைக்காக ஏராளமான வெறுப்பைப் பெற்றிருந்தார்.

சவுரவ் கங்குலி மற்றும் விராட் கோலி வார்த்தை போர்

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவருமான சவுரவ் கங்குலி, தன்னை விமர்சித்தவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

பெங்காலி நாளிதழான ‘ஆஜ்கால்’ உடன் பேசிய கங்குலி, ரோஹித் ஷர்மாவை இந்திய அணியின் கேப்டனாக நியமித்ததற்காக தன்னைக் குறைகூறிய விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். 2021 டி 20 உலகக் கோப்பையில் இருந்து இந்தியா முதல் ரவுண்டில்  வெளியேறிய பிறகு விராட் கோலி விளையாட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் விலக வேண்டிய கட்டாயத்திற்குப் தள்ளப்பட்டார்.

அப்போது செய்தியாளர் சந்திப்பில் பேசிய  விராட் கோலி இந்திய ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து விருப்பமின்றி நீக்கப்பட்டதாக திட்டவட்டமாக கூறினார். ஆனால் அதற்கு நேர் மாறாக ​​கங்குலி ஊடகங்களிடம் கூறுகையில், இரு தரப்பினரும் விவாதித்து இணக்கமான யோசனைகளுக்கு பிறகே கோலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என கூறினார்.

Also Read: புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சம்பளம் மற்றும் சலுகைகள் விவரங்கள்!

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த சவுரவ் கங்குலி

இந்த நிலையில் ஜூலை 13, சனிக்கிழமையன்று, ஒரு பெங்காலி தினசரி நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ரோஹித் ஷர்மாவின் தலைமையின் கீழ் இந்திய அணியின் வெற்றியைப் பார்க்கும்படி கங்குலி கூறியுள்ளார். ரோஹித்தின் கீழ் டி20 உலகக் கோப்பை 2024 வெற்றியை இந்தியா கொண்டாடியபோது, ​​ரோஹித்தை இந்திய அணியின் கேப்டனாக மாற்றியது நான் தான் என்பதை அனைவரும் மறந்துவிட்டதாக கங்குலி கூறினார்.

“இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ரோஹித் ஷர்மாவிடம் ஒப்படைத்த போது அனைவரும் என்னை விமர்சித்தனர்.இப்போது ரோஹித் சர்மா தலைமையில் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளதால் அனைவரும் என்னை தவறாக பேசுவதை நிறுத்திவிட்டனர். உண்மையில் நான்தான் அவரை இந்திய அணியின் கேப்டனாக நியமித்தேன் என்பதை அனைவரும் மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.” என்று சவுரவ் கங்குலி ஆஜ்கல் பத்திரிகை பேட்டியில் கூறினார்.

ஐபில் பற்றி சவுரவ் கங்குலி

தற்போது சவுரவ் கங்குலி IPL போட்டிகளில் DC அணியின் கிரிக்கெட் இயக்குனராக இருக்கிறார். DC அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் டெல்லி கேபிட்டல்ஸ் அணியிலிருந்து பிரிந்து செல்ல இருக்கிறார். இந்த முறை DC வெற்றி பெற வேண்டும். இந்தியரை தலைமை பயிற்சியாளராக நியமிப்பது குறித்து நிர்வாகத்திடம் பேசுவேன்” என்று கங்குலி கூறினார்.

“நான் தலைமை பயிற்சியாளராக ஒரு முறை முயற்சிக்க விரும்புகிறேன். நான் சில புதிய வீரர்களை கொண்டு வருவேன். இங்கிலாந்தில் இருந்து ஜேமி ஸ்மித்தை அழைத்து வர விரும்பினேன். டெல்லியின் SA20 உரிமையில் அவரை சோதிக்க விரும்பினேன். அவரும் வர விரும்பினார், ஆனால் சில தேதி பிரச்சனை காரணமாக முடியவில்லை” என கங்குலி கூறினார்.

Leave a Comment