T20 World Cup அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றுவிட்டன. மீதம் உள்ள இரண்டு இடங்களுக்கு கடும் போட்டி நிலவுகிறது. சூப்பர் 8 குரூப் 1 இல் உள்ள நான்கு அணிகளில் மூன்று அணிகள் மீதமுள்ள இரண்டு அரையிறுதி இடங்களுக்கு போட்டியில் உள்ளன.
குரூப் 1 இல் உள்ள அணிகளின் தற்போதைய நிலைமை மற்றும் ஒவ்வொரு அணியும் அரையிறுதி போட்டிக்கு செல்ல என்ன தேவை என்பதை இங்கே பார்க்கலாம்:
T20 World Cup அரையிறுதி செல்வதற்கான வாய்ப்பு
இந்தியா
இந்தியா தற்போது இரண்டு ஆட்டங்களில் நான்கு புள்ளிகளுடன் குரூப் 1 இல் முதலிடத்தில் உள்ளது மற்றும் அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி சூப்பர் எட்டுகளில் முதல் இரண்டு ஆட்டங்களில் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷை தோற்கடித்தது. இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இன்று நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் செல்ல முடியும்.
இருப்பினும், இந்தியா தோற்றால், குரூப் 1 ல் ஆஸ்திரேலியா முதல் இடம் பெற வாய்ப்புள்ளது. அதே போல மற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் வங்கதேசத்தை வீழ்த்தினால், ஆப்கானிஸ்தான் முதலிடம் பெறவும் வாய்ப்புள்ளது . ஆனால் இந்தியா இந்தியாவின் நெட் ரன் ரேட் +2.425 ஆகும். எனவே ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கனிஸ்தான் என இரண்டு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டுமானால் மிக பெரிய வித்தியசாத்தில் வெற்றி பெற வேண்டும்.
நெட் ரன் ரேட்டில் ஆஸ்திரேலியா +0.223 பெற்று இரண்டாம் இடத்திலும் நெட் ரன் ரேட் -0.650 உடன் ஆப்கானிஸ்தான் மூன்றாம் இடத்திலும் உள்ளது.
ஆஸ்திரேலியா
2021 T20 சாம்பியன் ஆஸ்திரேலியா முதல் சூப்பர் எட்டு போட்டியில் பங்களாதேஷை தோற்கடித்தனர், ஆனால் இரண்டாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சிகரமான தோல்வியை சந்தித்தது. எனவே குரூப் 1 ல் யார் வேண்டுமானாலும் அரையிறுதிக்கு தகுதி பெறலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.
இன்று ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் செயின்ட் லூசியாவில் நடக்கும் ஆட்டத்தில் விளையாட உள்ளது. இதில் மிட்செல் மார்ஷ் அணி இந்தியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற தீவிரமாக உள்ளது.
ஒருவேளை அவர்கள் இந்தியாவுக்கு எதிராக தோற்றால், அவர்களின் தலைவிதி ஆப்கானிஸ்தான் vs பங்களாதேஷின் முடிவு மற்றும் நெட் ரன் ரேட்டைப் பொறுத்து அமையும்.
ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் வென்று இரண்டு புள்ளிகளுடன் குரூப் 1 இல் நெட் ரன் ரேட் -0.650 உடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
சூப்பர் எட்டுகளின் தொடக்க ஆட்டத்தில் இந்தியாவிடம் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அபாரமாக விளையாடிய ஆப்கனிஸ்தான், ஆஸ்திரேலியா அணியை 21 ரன்கள் வித்தியசாத்தில் வீழ்தியது. ஆப்கனிஸ்தான் அணிக்கு இந்த வெற்றி ஒரு மைல் கல் ஆகும் .
ரஷித் கானின் அணி, பங்களாதேஷை நல்ல ரன் ரேட்டுடன் வீழ்த்தினால், முதல் முறையாக T20 World Cup ல் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்பை பெறலாம்.
திங்கட்கிழமை பகலில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் நிலையில், ஆப்கானிஸ்தான் பங்களாதேஷுக்கு எதிரான மாலை ஆட்டத்தில் விளையாட உள்ளது. இதனால் வெற்றிக்கு என்ன ரன் ரேட் தேவை என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல் விளையாட முடியும்.
பங்களாதேஷ்
பங்களாதேஷ் இரண்டு சூப்பர் எட்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து பூஜ்ஜிய புள்ளிகளுடன் குரூப் 1 இல் கடைசி இடத்தில் உள்ளது. எனவே அவர்கள் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்பை ஏறக்குறய இழந்து விட்டனர்.
முதலில், அவர்கள் ஆஸ்திரேலியா மற்றும் பின்னர் இந்தியாவிடம் தோற்றனர், ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆப்கானிஸ்தான் வெற்றி பங்களாதேஷுக்கு அணிக்கு ஒரு சொற்ப வாய்பை குடுத்துள்ளது.
பங்களாதேஷ் அணி அரையிறுதிக்கு வருவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. ஆனால் அது கணித ரீதியாக அரையிறுதிக்கு தகுதி பெற வாய்ப்புள்ளது.
பங்களாதேஷ் அவர்களின் நிகர ஓட்ட விகிதத்தை (தற்போது -2.489) அதிகரிக்க ஆப்கானிஸ்தானை ஒரு பெரிய வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும் மற்றும் இந்திய அணி ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க வேண்டும். இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் செயின்ட் லூசியாவில் நடக்கும் ஆட்டத்தில் விளையாட உள்ளது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது.