WhatsApp Group Join Now
Telegram Group Join Now

T20 World Cup India vs Australia. ரோஹித் சர்மா அதிரடி ஆட்டம். மண்ணை கவ்விய ஆஸ்திரேலியா

T20 World Cup India vs Australia. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா T20 உலககோப்பை போட்டியில் சூப்பர் 8 சுற்றில் இன்று மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பௌலிங்கை தேர்வு செய்தார்.

இந்தியா பேட்டிங்: ரோஹித் சர்மா அதிரடி ஆட்டம்.

இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதற்கு முன்பு விளையாடிய அணியையே இந்த போட்டிக்கும் தேர்வு செய்தனர். இந்திய அணி சார்பில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். விராட் கோலி 5 பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். இந்த உலககோப்பையில் விராட் கோலி தொடர்ந்து ரன் எடுக்க திணறுகிறார்.

இதுவரை கோலி இந்த உலக கோப்பையில் 6 போட்டிகளில் விளையாடி, 66 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதிக பட்சமாக பங்களாதேஷ் அணியுடன் 28 பந்துகளில் 37 ரன்கள் எடுத்துள்ளார். 

ஆனால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மிக சிறப்பான தொடக்கத்தை அளித்தார். ரோஹித் சர்மா 41 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் அனைத்து பேட்ஸ்மேன்களும் தடுமாறிய போதும் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். ரோஹித் சர்மா 7 பௌண்டரி மற்றும் 8 சிக்ஸர் உதவியுடன் 92 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

சூர்யா குமார் யாதவ் வழக்கம் போல் அதிரடியாக விளையாடி 16 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஜோஷ் ஹஸுல்வுட் பந்தில் ஆட்டம் இழந்தார். ஷிவம் துபே 22 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஹர்திக் பாண்டியா 17 பந்துகளில் 27 ரன்கள் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இறுதியாக இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 எடுத்தது. ஆஸ்திரேலியா பௌலிங் பொறுத்தவரை அனைத்து பௌலர்களும் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் குடுத்துள்ளனர். ஆனால் ஜோஷ் ஹசல்வுட் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 14 ரன்கள் குடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

மிச்சேல் ஸ்டார்க் 4 ஓவர்களில் 45 ரன்கள் குடுத்து 2 விக்கெட்களும், மார்க் ஸ்டாய்னிஸ் 4 ஓவர்களில் 56 ரன்கள் குடுத்து 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்.

ஆஸ்திரேலியா பேட்டிங்: டிராவிஸ் ஹெட் கடும் முயற்சி

20 ஓவர்களில் 206 என்ற கடினமான இலக்கை சேஸ் செய்ய இறங்கிய ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் தொடக்க வீரர்களாக இறங்கினர். ஆனால் டேவிட் வார்னர் 6 ரன்களுக்கு அர்ஷிதீப் சிங் பந்தில் ஆட்டம் இழந்தார். ஸ்லிப்பில் சூரியகுமார் யாதவ் கடினமான கேட்ச் பிடித்து வார்னரை வெளியேற்றினார்.

அதன் பின் இறங்கிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்சேல் மார்ஷ் டிராவிஸ் ஹெட் உடன் சேர்ந்து இந்திய அணியின் பந்து வீச்சை சிதற அடித்தனர். மிட்சேல் மார்ஷ் 27 பந்துகளில் 38 ரன்கள் அடித்திருந்த நிலையில் குல்தீப் யாதவ் வீசிய பந்தை புல் ஷாட் அடித்தார். ஆனால் பௌண்டரி லைனில் இருந்த அக்ஸர் பட்டேல் சரியான நேரத்தில் குதித்து ஒற்றை கையால் கேட்ச் பிடித்தார். அந்த கேட்ச் ஆட்டத்தின் போக்கை மாற்றி அமைத்தது.

அதன் பின் இறங்கிய கிளென் மேக்ஸ்வெல் சிறிய அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெளியேறினார். 12 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதன் பின் வந்த வீரர்கள் ஆட்டத்தின் வேகத்தை தக்க வைக்க தடுமாறினர். ஆஸ்திரேலியாவிற்கு இருந்த ஒரே நம்பிக்கை டிராவிஸ் ஹெட் தான். ஆனால் அவரும் 43 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 

இறுதியாக ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 181 ரன்கள் எடுத்தது. இந்தியா 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குரூப் 1 ல் முதல் அணியாக அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 

இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்களையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் அக்ஸர் பட்டேல் தலா 1 விக்கெட்களை வீழ்த்தினர்.

இந்திய அணி தற்போது அதிகாரபூர்வமாக அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. குரூப் 1 ல் மற்றொரு அணி எது என்பது இன்றைய ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் போட்டியின் முடிவை பொறுத்து அமையும்.

Leave a Comment