WhatsApp Group Join Now
Telegram Group Join Now

பாரிஸ் ஒலிம்பிக் 2024 நிறைவு விழாவில் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் அசத்தல் சாகசம். முழு வீடியோ!

2024 பாரிஸ் ஒலிம்பிக்கின் நிறைவு விழாவில் டாம் குரூஸ் பல அசத்தலான சாகசங்களை நிகழ்த்தி அனைவரின் புருவத்தை உயர்த்த வைத்தார். தனது திரைப்படங்களில் உள்ள அனைத்து ஆபத்தான ஸ்டண்ட்களையும் நேரடியாக ஒலிம்பிக்கின் நிறைவு விழாவில் நிகழ்த்தி காட்டினார்.

மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான ஸ்ட்ரேட் டி பிரான்சின் மேற் கூரையில் இருந்து குதித்து மேடையில் இறங்கி விழாவுக்கு ஹாலிவுட் டச் கொடுத்தார். டாம் குரூஸ் ஒலிம்பிக்கில் தனது ஸ்டண்ட் மூலம் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். பார்வையாளர்கள் அவரை மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

பாரிஸ் ஒலிம்பிக் நிறைவு விழாவில் டாம் குரூஸ் சாகச நிகழ்ச்சி!

டாம் குரூஸ் மேற் கூரையில் இருந்து இடுப்பில் கயிறு கட்டியபடி குதித்து மைதானத்தில் என்ட்ரி குடுத்தார். அவர் மேடையில் இறங்கியதும், அவரை லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் வரவேற்றார், அவர் பாரிஸ் மேயர் அன்னே ஹிடால்கோவிடம் இருந்து ஒலிம்பிக் கொடி கட்டிய தடியடியைப் பெற்றார். பின்னர் டாம் க்ரூஸ் அந்த கொடியை தனது மோட்டார் சைக்கிளில் பின்புறம் வைத்து கொண்டு ஸ்டேடியத்தை விட்டு வெளியேறினார். இது பாரிஸிலிருந்து அடுத்த ஆண்டு அமெரிக்காவில் உள்ள LA க்கு ஒலிம்பிக் தடி அனுப்பப்படுவதைக் குறிக்கிறது.

பை தி வே பை ரெட் ஹாட் சில்லி பெப்பர்ஸ் பின்னணியில் ஓடிக்கொண்டிருக்க, டாம் க்ரூஸ் பாரிஸின் தெருக்களில் பைக்கை ஓட்டி சென்று பின்னர் ஒரு விமானத்தில் பைக்கை ஏற்றினார். 

பின்னர் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒளிபரப்பபட்டது.குரூஸ் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் டைவ் செய்து ஹாலிவுட் அடையாளம் அருகே தரையிறங்கினார். பின் அந்த கொடி பொருத்திய தடியை சைக்கிள் வீரரிடம் ஒப்படைத்தார். 

குரூஸ் ஜூலை 27 அன்று ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் முதன்முதலில் காணப்பட்டார், அதைத் தொடர்ந்து அரியானா கிராண்டே, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், சாரா ஜெசிகா மற்றும் பல பிரபலங்களுடன் சில போட்டிகளில் தோன்றினார். தொடக்க விழாவிற்கு ஒரு நாள் முன்னதாக, பிரான்சின் கலாச்சார அமைச்சர் ரசிதா தாட்டியால் அவருக்கு நைட் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர் என்று பெயரிடப்பட்டது.

லாஸ் ஏஞ்சல்ஸில் ஒலிம்பிக் 2028

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி பல சவால்களை கடந்து வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதை அடுத்து 2028ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் எவ்வாறு நடத்தப்படும் என்பதைப் பார்க்க அனைவரும் ஆவலுடன் உள்ளனர். LA மேயர் பாஸ் வெள்ளிக்கிழமை பாரிஸில் நிருபர்களிடம் பேசும் போது, “எங்கள் நகரத்தின் பன்முகத்தன்மையையும் சர்வதேச தன்மையையும் பார்க்கலாம். எங்களிடம் ஹாலிவுட் உள்ளது, எனவே நிறைய மாயாஜால நிகழ்வுகளை நான் எதிர்பார்க்கிறேன். இது இந்த நிறைவு விழாவிலேயே தொடங்கும்” என கூறினார்.

Also Read: நீரஜ் சோப்ரா மனு பாக்கர் காதல்? மௌனம் கலைத்த மனு பாக்கர் தந்தை.

இந்த ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா 6 பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment