WhatsApp Group Join Now
Telegram Group Join Now

இந்திய அணியின் புதிய டி20 கேப்டன் யார்? சூர்யகுமார் யாதவ் அல்லது ஹர்திக் பாண்டியா?

டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஒய்வு பெற்றதை அடுத்து இந்திய அணியின் புதிய டி20 கேப்டன் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கவுதம் கம்பீர் பயிற்சியாளராக பங்கேற்க இருக்கும் முதல் தொடர் இலங்கைக்கு எதிராக இந்த மாதம் ஜூலை 27ஆம் தேதி டி20 போட்டியுடன் தொடங்குகிறது. இதில் இந்தியா 3 T20 மற்றும் 3 ODI போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்த நிலையில் ஒரு நாள் போட்டிகள் ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா மற்றும் விராட் கோலி வெளிநாட்டில் குடும்பத்துடன் ஓய்வில் உள்ளனர். இந்த நிலையில் அவர்கள் இந்த தொடரில் பங்கேற்பார்களா என்பது சந்தேகமாக உள்ளது. கவுதம் கம்பீர் அவர்களை அணிக்கு திரும்புமாறு கோரிக்கையும் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ரோஹித் சர்மா அணிக்கு திரும்பவில்லை என்றால் கேஎல் ராகுல் அல்லது ஷுப்மண் கில் இந்திய ஒரு நாள் (ODI) போட்டிகளுக்கு கேப்டனாக வாய்ப்புள்ளது.

மறு புறம் ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்று விட்டதால் இந்திய அணியின் டி20 கேப்டன்ஷிப் இடம் காலியாக உள்ளது. 

ரோஹித் சர்மா ஓய்வுக்கு பிறகு துணை கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா கேப்டன்ஷிப் பொறுப்பை ஏற்பார் என இருந்த நிலையில் இதில் தற்போது ஒரு ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.

இந்திய அணியின் புதிய டி20 கேப்டன் யார்?

இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இந்திய அணியை 2026 டி20 போட்டிக்கு தயார் செய்ய விரும்புகிறார். எனவே 2026 டி20 போட்டி வரை தொடர்ந்து ஒரே கேப்டன் இருந்தால் அணியை நன்றாக தயார் செய்ய முடியும் என நினைக்கிறார்.

எனவே அவர் சூர்யகுமார் யாதவ் அவர்களை கேப்டனாக்க விரும்புகிறார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சிளாளர் கவுதம் கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் இதை பற்றி ஹர்திக் பாண்டியாவிடம் பேசிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூர்யகுமார் யாதவ் இது வரை இந்திய அணிக்காக 16 டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். அதில் 10 போட்டிகளில் வெற்றியும், 5 போட்டிகளில் தோல்வியும் மற்றும் ஒரு போட்டி சமனிலும் முடிந்துள்ளது.

இலங்கைக்கு எதிராக டி20 போட்டிகளில் பங்கேற்கும் ஹர்திக் பாண்டியா ஒரு நாள் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். சில தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் ஒரு நாள் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்திய அணியின் புதிய டி20 கேப்டன் யார் பொறுப்பேற்பார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். சூர்யகுமார் மற்றும் ஹர்திக் ரசிகர்கள் X தளத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Comment