சிஎஸ்கே அணியில் தோனி விளையாடுவது சந்தேகம் ஏன்? ரசிகர்களின் விருப்பம், பிசிசிஐ எடுக்கும் முடிவில் உள்ளது.
தற்போது 42 வயதாகும் மஹிந்திரா சிங் தோனி ஐபில் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த 2008 ஆண்டு முதல் விளையாடி வருகிறார். இது வரை சிஎஸ்கே அணிக்காக 5 முறை ஐபில் பட்டத்தை வென்றுள்ளார். மேலும் 2 முறை சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்றுள்ளார்.
கடந்த சில வருடங்களாக தோனி முழங்கால் வலியால் அவதி பட்டு வருகிறார். அவர் முழங்கால் அறுவை சிகிச்சையும் மேற்கொண்டுள்ளார். இருப்பினும் அவரால் பழைய படி விளையாட முடியாத காரணத்தால் இந்த ஆண்டு நடை பெற்ற ஐபில் போட்டிகளில் கடைசியில் ஒரு சில ஓவர்கள் மட்டுமே விளையாட வந்தார். அதே போல் தனது கேப்டன்ஷிப் பதவியையும் ரிதுராஜ் கைக்கவாடிடம் ஒப்படைத்தார்.
இந்த ஆண்டு நடந்த ஐபில் தொடரில் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணி பிளேஆப் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. இருப்பினும் அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ருதுராஜ் தலைமையில் தான் விளையாடும் என எதிர்பார்க்க படுகிறது. இந்த நிலையில் தோனி வரும் IPL 2025 தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஐபில் விதிமுறைகள்:
வரும் ஐபில் 2025 க்கு முன்பாக மெகா ஏலம் நடைபெற உள்ளது. எனவே ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்து கொள்ள முடியும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை ருதுராஜ் கைக்கவாட், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே மற்றும் மதீஷா பத்திரனா ஆகிய நால்வரை CSK தக்க வைக்கும் என நம்பப்படுகிறது.
தற்போது உள்ள ஐபில் விதிமுறை படி ஒவ்வொரு அணியும் அதிக பட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும். அதில் அதிக பட்சமாக 3 இந்திய வீரர்கள் மற்றும் 1 வெளி நாட்டு வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம்.
சிஎஸ்கே அணியில் தோனி விளையாடுவது சந்தேகம்?
எனவே தற்போது உள்ள விதி முறை படி சிஎஸ்கே அணியில் தோனி விளையாடுவது சந்தேகம் தான். தற்போது 42 வயதாகும் தோனிக்கு உடற்தகுதி பிரச்னையும் இருப்பதால், ஐபில் 2025 தொடரில் விளையாடுவது கேள்வி குறியாகியுள்ளது. இருப்பினும் தோனி தனது கடைசி போட்டியை சென்னையில் விளையாட வேண்டும் என கடந்த ஆண்டு விருப்பம் தெரிவித்திருந்தார். எனவே அந்த விருப்பம் நிறைவேறுமா என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
ஐபில் அணியின் உரிமையாளர்கள் கூட்டம்
இன்று மதியம் ஐபில் அணியின் உரிமையாளர்கள் கூட்டம் நடை பெற உள்ளது. அதில் வீரர்களை தக்க வைக்கும் எணிக்கையை அதிக படுத்த வேண்டும் என பிசிசிஐ யிடம் கோரிக்கை வைக்க உள்ளனர். ஒரு வேலை அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு தக்க வைக்கும் வீரர்களின் எண்ணிக்கை அதிக படுத்தினால் தோனி CSK அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது. எனவே இன்று ஜூலை 31, 2024 அன்று ஒரு முடிவு தெரியும் என நம்பலாம்.
ஒரு வேளை தோனி அணியில் வீரராக இடம் பெறாவிட்டாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எதாவது ஒரு வகையில் தொடர்ந்து பயணிப்பார் என எதிர்பாக்கப்படுகிறது. அணியின் பயிற்சியாளர் அல்லது வழிகாட்டி என எதாவது ஒரு பதவியில் இருப்பார்.
Also Read: ஐபிஎல் 2025: எல்எஸ்ஜி அணியில் இருந்து வெளியேறும் கேஎல் ராகுல்
இன்று நடைபெறும் ஐபில் அணியின் உரிமையாளர்கள் கூட்டத்தில் ஏலம் எடுக்கும் தொகையை அதிகரிப்பது, 5 அல்லது 6 வீரர்களை தக்கவைத்து கொள்ள அனுமதி போன்ற விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளது.