ஜிம்பாப்வேக்கு எதிராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் உலக சாதனை: 1 பந்தில் 13 ரன்கள். வைரல் வீடியோ!

இளம் இந்திய தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) டி20 போட்டியின் முதல் பந்திலேயே 13 ரன்கள் அடித்த வீரர் என்ற வரலாற்றைப் படைத்தார். 

ஞாயிற்றுக்கிழமை ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே இடையே நடைபெற்ற ஐந்தாவது டி20 போட்டியில் ஜெய்ஸ்வால் இந்த மைல்கல்லை எட்டினார். 

ஞாயிற்றுக்கிழமை ஜிம்பாப்வேக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய இன்னிங்ஸின் முதல் பந்திலேயே 12 ரன்கள் எடுத்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் வரலாற்றை எழுதினார். 

உலக சாதனை படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்

மேட்ச் தொடங்கிய முதல் பந்திலேயே சிக்கந்தர் ராசா ஒரு ஃபுல்-டாஸை வீசினார். ஜெய்ஸ்வால் அதை டீப் ஸ்கொயர் லெக்கில் சிக்ஸருக்கு அடித்தார். நடுவர் நோ-பால் சிக்னல் செய்தார். அது இந்தியாவுக்கு ஃப்ரீ-ஹிட் ஆனது. அடுத்த பந்து லென்த் டெலிவரியாக இருந்தது, ஜெய்ஸ்வால் மீண்டும் அதை நேராக பௌலர் தலைக்கு மேல் தொடர்ந்து இரண்டாவது சிக்ஸருக்கு அடித்தார். 

இதன் மூலம் இந்தியா ஒரு அதிகார பூர்வ (Legal delivery) பந்து வீச்சில் 13 ரன்கள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஆண்கள் விளையாட்டின் முதல் பந்திலேயே 12 ரன்கள் எடுத்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றார்.

ஜெய்ஸ்வாலுக்கு முன், தான்சானியா வீரர் இவான் செலிமானி டி20 போட்டியின் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு சிக்சர்களை அடித்தார். 24 வயதான வலது கை பேட்டர் 2022 இல் தான்சானியா மற்றும் ருவாண்டா இடையே நடந்த டி20 போட்டியின் போது இந்த சாதனையை நிகழ்த்தினார்.

சனிக்கிழமை (ஜூலை 13) நடைபெற்ற 4வது டி20 போட்டியில் 53 பந்துகளில் 93 ரன்கள் எடுத்ததற்காக ஆட்ட நாயகன் விருதை வென்ற ஜெய்ஸ்வால், ஞாயிற்றுக்கிழமை தனது சிறப்பான தொடக்கத்தை பயன்படுத்த முடியாமல் நான்காவது பந்தில் சிக்கந்தர் ராசாவின் பந்தில் ஆட்டமிழந்தார். முதல் ஓவரிலேயே அவர் ஐந்து பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

Also Read: ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக் விவாகரத்து? வைரல் வீடியோ!

கடந்த மாதம் டி 20 உலகக் கோப்பை 2024 பட்டத்தை வென்ற இந்திய அணியின் ஒரு பகுதியாக இருந்த 22 வயதான ஜெய்ஸ்வால், டி 20 உலகக் கோப்பை 2024 இறுதிப் போட்டியில் வென்ற பிறகு பார்படாஸிலிருந்து இந்தியா தாமதமாக வந்ததால் முதல் இரண்டு போட்டிகளைத் தவறவிட்டார் என்பது குறிப்பிட தக்கது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டி20 தொடரை வென்ற இந்தியா

ஞாயிற்றுக்கிழமை நடந்த ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது.

சஞ்சு சாம்சன் 45 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். பின்னர் விளையாடிய ஜிம்பாப்வே அணி 18.3 ஓவர்களில் 125 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது.

இதன் மூலம் இந்தியா T20I தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது. இளம் இந்திய அணியை ஸுப்மண் கில் சிறப்பாக வழிநடத்தினார்.

Leave a Comment