IND vs SL 2024 1st T20I மேட்ச் குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த பயணத்தில் இந்தியா மற்றும் இலங்கை 3 டி20 மற்றும் 3 ODI போட்டிகளில் விளையாட உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் T20I ஐ இன்று (சனிக்கிழமை) நடைபெறும்.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சரித் அசலங்காவின் இலங்கையை எதிர்கொள்கிறது.
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரண்டு அணிகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் முழுநேர டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் போட்டி ஆகும்.
இதற்கிடையில், இலங்கை அணிக்கு சனத் ஜயசூரியா தற்காலிக தலைமை பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வனிந்து ஹசரங்கவிடம் இருந்து சரித் அசலங்கா அணி தலைவர் பொறுப்பை ஏற்றுள்ளார்.
டி20 உலககோப்பைக்கு பிறகு ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஓய்வை அறிவித்தனர். எனவே இந்த 3 பெரிய வீரர்கள் இல்லாமல் இந்தியா விளையாட போகும் முதல் முக்கிய தொடராகும்.
இலங்கை அணியை பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர்களான துஷ்மந்த சமீர மற்றும் நுவான் துஷார ஆகியோர் காயம் இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர். இது இலங்கை அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
IND vs SL 2024 1st T20I எங்கு எப்போது நடைபெறும்?
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ஜூலை 27ஆம் தேதி சனிக்கிழமை பல்லேகலேயில் உள்ள பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7:00 மணிக்கு நடைபெறுகிறது.
இந்தியாவில் IND vs SL 2024 1st T20I நேரடி ஒளிபரப்பை எங்கே பார்ப்பது?
சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் இந்தியா மற்றும் இலங்கை போட்டிகளை டிவியில் ஒளிபரப்பும். இந்த தொடர் சோனி ஸ்போர்ட்ஸ் டென் 3 (இந்தி) SD மற்றும் HD, சோனி ஸ்போர்ட்ஸ் டென் 4 (தமிழ் அல்லது தெலுங்கு), மற்றும் சோனி ஸ்போர்ட்ஸ் டென் 5 SD மற்றும் HD ஆகியவற்றில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
IND vs SL 2024 1st T20I லைவ் ஸ்ட்ரீம் எங்கே பார்க்கலாம்?
இந்தியாவில் நடக்கும் IND vs SL T20I தொடரின் நேரடி ஒளிபரப்பு Sony Liv ஆப் மற்றும் இணையதளத்தில் கிடைக்கும்.
IND vs SL 2024 1st T20I முழு அணி விவரம்.
இந்திய T20I அணி: சூர்யகுமார் யாதவ் (C), Ꮪhubman கில் (VC), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரின்கு சிங், ரியான் பராக், ரிஷப் பந்த் (WK), சஞ்சு சாம்சன் (WK), ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது. சிராஜ்.
இலங்கை T20I அணி: சரித் அசலங்க (C), பதும் நிஸ்ஸங்க, குசல் ஜனித் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், தசுன் ஷனக, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷன, சமிந்து தீக்ஷன, மதீஷான, மத்தீகசிங்க, மதீஷன, விக்ரமசிங். அசித்த பெர்னாண்டோ, பினுர பெர்னாண்டோ.